ஊ.ஒ.தொ. பள்ளியில் தொட்டியுடன் கூடிய கை கழுவும் குழாய் திறப்பு-ஒன்றிய கவுன்சிலர் பஜீர் அகமது

ஊ.ஒ.தொ. பள்ளியில் தொட்டியுடன் கூடிய கை கழுவும் குழாய் திறப்பு-ஒன்றிய கவுன்சிலர் பஜீர் அகமது

Bismi

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா காரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு காலை மற்றும் மதிய உணவு உண்ட பிறகு கை கழுவுவதற்கு குழாய்கள் இல்லாமல் மாணவ மாணவிகள் சிரமப்பட்டதை பார்த்து முன்னாள் காரையூர் ஒன்றிய கவுன்சிலர் பஜீர் அகமது ஏற்பாட்டில் தனது சொந்த செலவில் தொட்டியுடன் கூடிய புதிய கை கழுவும் குழாய்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆரோக்கியமேரி காரையூர் முன்னாள் கவுன்சிலர் மருதமுத்து முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மீராகனி ஜெய்லானி ஜின்னா ஸ்ரீதர் வெள்ளை கண்ணு சங்கரன் பட்டி ஐயப்பன் பெருமாள் ராமச்சந்திரன் பள்ளியின் ஆசிரியை ஆசிரியர்கள் சிறப்பாக கலந்து கொண்டனர் .இந்நிகழ்ச்சியில் பஜீர் அகமது அவர்களின் கல்வித் தொண்டு மிகவும் சிறப்பானது என்றும் மென்மேலும் வளர வேண்டும் என்றும் முன்னாள் சேரனுர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் கை காமராஜ் அவர்கள் சிறப்பாக பணி செய்த பஜீர் அகமது அவர்களை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் மற்றும் காரையூர் பொதுமக்கள் பள்ளியின் பெற்றோர்கள் வாழ்த்தி மகிழ்ச்சியடைந்தனர்

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்