உலக மண் தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் மக்கும் வகையிலான பைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்சி மாற்றம் அமைப்பினர்!

உலக மண் தினத்தை முன்னிட்டு மண் வளத்தை காப்பதன் அவசியம் குறித்து சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்கும் கையிலான பைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் இன்று நடைபெற்றது. திருச்சி மாற்றம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் இயற்கை வளத்தில் மண் வளம் மிக முக்கியமானது அதை பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தி மாசுபடுத்தாமல் இருக்க வேண்டும் எனவும், கடற்கரையில் பிளாஸ்டிக் பைகள் தவிர்த்து கடல் வளத்தையும், கடலில் உள்ள உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும் எனவும், பிளாஸ்டிக் கழிவுகளால் கடல்வளம் மற்றும் அதில் வாழும் உயிரினங்கள் மோசமாக பாதிக்கபடுகிறது என்பதை அனைவரும் உணர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை கடற்கரையில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் எடுத்துரைக்கப்பட்டது.

- Advertisement -

மேலும் கடற்கரை பகுதிகளை நாம் பாதுகாக்க தவறியதன் விளைவாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி பகுதிகளில் பெரும் மழை பொழிந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற இயற்கை பாதிப்புகள் உருவாக நாமும் ஒரு காரணம் என்பதை உணர்ந்து, அனைவரும் சுற்றுச்சூழல் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும், அது நமது அனைவரின் கடமை எனவும் பொதுமக்கள் சுற்றுலா பயணிகளுக்கு மக்கும் வகையிலான பைகள் வழங்கி விழிப்புணர்வு செய்தனர்.

இந்நிகழ்வில் வழக்கறிஞர் ஸ்டான்லி, வழக்கறிஞர் அப்துல் ரசாக், மாணவர் மன்றத்தை சேர்ந்த ஜீவா, அலெக்ஸாண்டர், ஜோஷ்வா, பிரபு, மார்க்ஸ், இஸ்லாம், பாண்டியன், இக்பால், தமிழ் வேந்தன் மற்றும் மாற்றம் அமைப்பின் நிறுவனரும் தேசிய மாநில விருது பெற்ற குறும்பட நடிகரும் இயக்குனருமான ஆர்.ஏ.தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்