திருநெல்வேலியில் நடைபெற்ற 77- வது குடியரசு தினவிழாவில், தேசிய கொடியை ஏற்றிவைத்து, சமாதான பலூன்களை பறக்க விட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கிய, மாவட்ட ஆட்சியர்!
திருநெல்வேலியில் நடைபெற்ற 77- வது குடியரசு தினவிழாவில், தேசிய கொடியை ஏற்றிவைத்து, சமாதான பலூன்களை பறக்க விட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கிய, மாவட்ட ஆட்சியர்!


திருநெல்வேலி, ஜன.26:-நாட்டின் 77- வது குடியரசு தினம் இன்று {ஜனவரி.26} நாடு முழுவதும், கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருநெல்வேலி பாளையங்கோட்டை வ உசி திடலில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், காலை சரியாக 8.05 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், மாவட்ட காவல் கண்கணிப்பாளர் டாக்டர் வி. பிரசன்ன குமார் முன்னிலையில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, காவலர்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை, ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து, காவல்துறையை சேர்ந்த 113 பேருக்கு, முதல்வர் காவலர் பதக்கங்களையும், மகளிர் சுய உதவி குழுவினர் உட்பட, 23 பயனாளிகளுக்கு 34 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர் உட்பட, 446 பேருக்கு பாராட்டு கேடயங்களையும், அரசுசாரா தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் தன்னார்வலர்கள் என மொத்தம் 22 பேருக்கு நற் சான்றிதழ்களையும், வழங்கினார். பின்னர் மூலக்கரைப்பட்டி அரசு மேல்நிலை பள்ளி, நெல்லை டவுண் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி, முருகன் குறிச்சி மேரிசர்ஜென்ட் பெண்கள் மேல்நிலை பள்ளி, மிலிட்டரி லைன் குழந்தை இயேசு பெண்கள் மேல்நிலை பள்ளி, மேலப்பாளையம் கோல்டன் ஜுபிளி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மற்றும் பழைய பேட்டை ராணி அண்ணா பெண்கள் கலை- அறிவியல் கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்ற, வணணமிகு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக, மூவண்ணத்தினால் ஆன சமாதான பலூன்களை, மாவட்ட ஆட்சியர் விண்ணில் பறக்க விட்டார். இந்த விழாவில்,மாநகர காவல் ஆணையர் முனைவர் நெ. மணிவண்ணன், நெல்லை போலீஸ் டிஐஜி ப. சரவணன், மாநகர காவல், மண்டல உதவி ஆணையர்கள் மேற்கு டாக்டர் சி.. மதன், கிழக்கு வி. வினோத்குமார் சாந்தாராம், தலைமையிடம் எஸ். விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் மு. துரை,சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஷ் குப்தா, நெல்லை கோட்ட வருவாய் அலுவலர் பிரியா, உதவி ஆட்சியர் {பயிற்சி} தன்லேந்து, துணை ஆட்சியர் {பயிற்சி} தே.ஜே.பி. கிரேசியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் {பொது} அனிதா உட்பட பலர், கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.


Comments are closed.