திருச்சி, பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் புதிய ஆம்னி பேருந்து நிலையத்திற்கு பூமி பூஜை, பணிகளை அமைச்சர் துவக்கி வைத்தார்.
திருச்சி பஞ்சப்பூரில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ரூபாய் 430 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. வருகிற ஜனவரி மாதம் பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தை திறப்பதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் ரூபாய் 17.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுவதற்கான பூமி பூஜையை இன்று காலை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார். நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி, மேயர் அன்பழகன், மாநகராட்சி பொறியாளர் சிவபாதம், மண்டல தலைவர்கள் விஜயலட்சுமி, துர்காதேவி, கவுன்சிலர்கள் முத்து செல்வம் காஜாமலை விஜய், சுரேஷ், பைஸ் அகமது மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Comments are closed.