இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்க ஆலோசனை கூட்டம்!
இந்திய தேசிய ரியல் எஸ்டேட் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் நலச் சங்கம் சார்பில் ரியல் எஸ்டேட் தொழிலாளர்கள் பதினோராவது மாநில எழுச்சி மாநாடு நடத்துவது தொடர்பாக கிழக்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
அச்சங்கத்தின் அகில இந்திய தலைவர் வி என் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். சென்னையில் 11 வது மாநில எழுச்சி மாநாடு நடத்துவது தொடர்பாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் திருச்சி கிழக்கு மண்டல மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய வி என் கண்ணன் கூறும்போது…
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நாங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். விவசாயிகள் பொதுமக்களுக்கு குரல் கொடுக்கும் அரசியல் கட்சிகள் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் எங்களுக்கு குரல் கொடுப்பதில்லை. ஒரு ஏழை இடம் வாங்க வேண்டும் என்றால் கூட அதற்கு நாங்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுகிறோம். ஒழுங்குமுறை ஆணையம் என்பது சரியாக செயல்பாட்டில் இல்லை. வரும் தேர்தலில் எங்களுக்கான ஓட்டு யாருக்கு என்பது குறித்து நிலைபாட்டை வரும் மாநாட்டில் தெரிவிக்க உள்ளோம் என கூறினார்.
Comments are closed.