நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்வி குழுமம் சார்பில் இலவச மருத்துவ முகாம்
நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்வி குழுமம் சார்பில் இலவச மருத்துவ முகாம்
நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்வி குழுமம், அகர்வால் பல் மருத்துவமனை, நாகை மற்றும் தெத்தி ஊராட்சி ஒன்றியம் இணைந்து இலவச பல் பரிசோதனை முகாம் தெத்தி ஊராட்சி மற்றும் கல்லூரி வளாகத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. முகாமினை கல்லூரியின் தலைவர் திருமதி. ஜோதிமணி அம்மாள் மற்றும் தெத்தி ஊராட்சி மன்ற தலைவர் ராஜஶ்ரீ தனபால் சிங்கம் துவக்கி வைத்தனர்.
இம்முகாமில் மருத்துவர் ஷீத்தல் பல் வேர் சிகிச்சை நிபுணர் நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியருக்கு இலவச பல் பரிசோதனை செய்து பல் வேர் சிகிச்சை, கண்ணுக்கு தெரியாத பல் சீரமைப்புகள் போன்ற மருத்துவ சிகிச்சைகளை வழங்கினர்.
இலவச பல் பரிசோதனை முகாமினை கல்லூரியின் செயலர் செந்தில்குமார், இணை செயலர் சங்கர் கணேஷ், கல்வி சார் இயக்குனர் மோகன், நிர்வாக தலைவர் மணிகண்ட குமரன், முதல்வர் ராமபாலன், துறைத் தலைவர் தேவராஜன், பேராசிரியர்கள் சந்தோஷ் ஶ்ரீ மற்றும் அய்யப்பா ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.