பா.ம.க-மதிமுக, ஆகிய கட்சிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் அஇஅதிமுகவில் இணைப்பு.

பா.ம.க-மதிமுக, ஆகிய கட்சிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர்  அஇஅதிமுகவில் இணைப்பு.

Bismi

திருச்சி தில்லை நகரில் அமைந்துள்ள அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திருச்சி வடக்கு, மேற்கு,பா.ம.க.,‌மதிமுக, ஆகிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் 30க்கும் மேற்பட்டோர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி வடக்கு மாவட்ட ஐடி விங் மாநில துணை செயலாளர் கே.ஆர். இளையராஜா, இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் டோல்கேட் எஸ். கார்த்திக் ஆகியோரது தலைமையில், தங்களை அஇஅதிமுகவில் இணைத்து கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட கழக அவைத்தலைவர் திரு. சமயபுரம் T. இராமு, ஒன்றிய கழக செயலாளர் திரு. V. ஆதாளி, பொதுக்குழு உறுப்பினர் அ. திருநாவுக்கரசு, மாவட்ட மீனவரணி செயலாளர் திரு. பேரூர் N. கண்ணதாசன், மாவட்ட மாணவரணி செயலாளர் திரு. T. அறிவழகன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் திரு. S.V.R ரவிசங்கர், திரு. எட்டரை தா. அன்பரசு மற்றும் கழக நிர்வாகிகள் திரு. S.M.R. ராஜேந்திரன், பொன். முருகேன், கந்தசாமி, ராஜாராம், தினேஷ், சுபாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்