திருச்சியில் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ்!
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டவுன்ஹால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு வைக்கவுண்ட்ஸ் கோஷன் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் கலந்து கொண்டு இரு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலா் செல்வராசு, பள்ளியின் தலைமையாசிரியா் ரேவதி நிா்மலா, கோட்டத் தலைவா் ஜெய நிா்மலா, மாமன்ற உறுப்பினா் சாதிக் பாஷா மற்றும் திரளான கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
Comments are closed.