புதுக்கோட்டையில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா!
புதுக்கோட்டையில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா!

சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா டிசம்பர் 18 ஆம் நாள் சிறுபான்மையினருடைய வாழ்வாதாரம் பொருளாதாம் மேம்பாடு குறித்து சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.ஜி.அமீர்பாஷா எடுத்துரைத்தார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜாமியா சிராஜீம் முனீர் அரபிக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்படி நேற்று (18.12.2025) காலை 11.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மையினருக்கான உரிமைகள், சிறுபான்மையினருடைய வாழ்வாதாரம் பொருளாதாம் மேம்பாடு மற்றும் உரிமைகள் குறித்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.ஜி.அமீர்பாஷா அவர்கள் எடுத்துரைத்தார்கள்.
அதேபோன்று விழாவில் புதுக்கோட்டை மாநகராட்சியின் துணை மேயர் திரு. காஜி.M.லியாகத் அலி, M.A அவர்களும் கலந்துகொண்டு சிறுபான்மையினருக்கு என்னென்ன உதவிகள் செய்து வருகின்றனர் என்ற விவரத்தினை எடுத்துக்கூறினார்கள். இந்த விழாவில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து வரப்பெற்ற, மூன்று கல்லறைத் தோட்டங்களுக்கு ரூ.64.92 இலட்சமும், ஆறு கபர்ஸ்தான்களுக்கு ரூ.15146 இலட்சமும், ஆக மொத்தம் ரூ.216.38 இலட்சத்திற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மற்றும் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் கெளரவ தலைவர் DR.KH.சலீம், பொறுப்பாளர் திரு.இப்ராஹிம் பாபு, கிறித்தவ மகளிர் உதவும் சங்கத்தின் கௌரவ செயலாளர் திரு.ஆரோக்கியசாமி மற்றும் ஜாமியா அரபிக் கல்லூரி முதல்வர் திரு.ஹாரூன், ஜாமியா அரபிக் கல்லூரி செயலாளர் திரு.சாகுல்ஹமீது, மாவட்ட பைத்துல் கமிட்டி செயலாளர் திரு.OSA.நூர்முகமது, புதுக்கோட்டை மாவட்ட அரசு காஜி திரு.சதக்கத்துல்லா, குளத்தூர் தாலுகா, ராவுசாப்பட்டி பாரிஸ் ப்ரிஸ்ட் (St.James Church) பங்கு தந்தை ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும், திருமயம் அப்போஸ்தலிக் இந்தியன் மிஷன்ஸ் (AIM) பெந்தெகொஸ்தே நிறுவனத் தலைவர் அருட்திரு.M.சைமன், கிறித்துவ தேவாலாய உபதேசியார் மற்றும் பணியாளர் நலவாரிய உறுப்பினர் அட்டைகள் வழங்கல், உறுப்பினர் திருமண உதவி தொகை, கிறித்தவ மகளிர் உதவிகள், தேவாலய புனரமைப்பு திட்டம் போன்ற நலத்திட்டங்களுக்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.


Comments are closed.