திருச்சி அண்ணா நகர் பகுதியில் பல்நோக்கு அலுவலக கட்டிடத்தை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார்
திருச்சி அண்ணா நகர் பகுதியில் பல்நோக்கு அலுவலக கட்டிடத்தை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார்

திருச்சி மாநகராட்சி மண்டலம் எண் 5 வார்டு எண் 28 அண்ணா நகர் 4-வது குறுக்குத் தெருவில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு அலுவலக கட்டிடத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் திறந்து வைத்து மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவரும் மாமன்ற உறுப்பினருமான அ.பைஸ் அகமதுவை அவரது இருக்கையில் உட்கார வைத்து வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் சரவணன், மேயர் அன்பழகன், ஆணையர் மதுபாலன், மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன், பகுதி செயலாளர் கமால் முஸ்தபா, கலந்தர் பஷீர், வட்ட செயலாளர் அம்ஜத், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் கபீர், தலைமை பிரதிநிதி வக்கீல் நூர்தீன், தலைமை செயற்குழு உறுப்பினர் பஜ்லூர் ரகுமான், அப்பீஸ் கான், மண்டலச் செயலாளர் முகமது தல்ஹா, மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் சமது, தர்கா சமது, மமக.பகுதி செயலாளர் தென்னூர் சதாம், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் ஜாபர் அலி, ஆரீஃப், இலியாஸ், ஜுபைர், அமீர் அப்பாஸ், பக்ரூதீன், மோத்தி (எ) காதர், சையது முர்துஸா, முகமது யூசுப், மரக்கடை அப்துல்லா உள்ளிட்ட நிர்வாகிகள், மமக பகுதி, வார்டு, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





Comments are closed.