- Advertisement -

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலரை சஸ்பென்ட் செய்து மேயர் அதிரடி!

- Advertisement -

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலரை சஸ்பென்ட் செய்து மேயர் அதிரடி!

திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம், மேயர் அன்பழகன் தலைமையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் மதுபாலன்,துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், ஆண்டாள் ராம்குமார் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Vagai

கூட்டத்தை தொடங்கி வைத்து மேயர் அன்பழகன் பேசும்போது…

திருச்சி மாநகராட்சியில் இதுவரை 1196 கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ 70 லட்சத்து 86 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு மாதத்தில் மட்டும் 52 கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தெரு நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நான்கு கருத்தடை மையங்கள் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் நடப்பு மாதத்தில் 726 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 28,625 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்துள்ளோம். மேலும் நீதிமன்ற உத்தரவுபடி கருத்தடை செய்யப்பட்ட தெரு நாய்களை பராமரிக்க தனி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

 

*பின்னர் திமுக கவுன்சிலர் முத்து செல்வம் பேசுகையில்,…*

 

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் கழிப்பிடம் டெண்டரில்

மாநகராட்சிக்கு ரூ. 13 லட்சம் கூடுதலாக கிடைத்தது. ஆனால் அங்குள்ள சைக்கிள் ஸ்டாண்ட் டெண்டரில் ரூ.3 லட்சம் மட்டுமே கூடுதலாக விடப்பட்டுள்ளது.

ஆகவே சத்திரம் பஸ்நிலையம் சைக்கிள் ஸ்டாண்ட் ரீ டெண்டர் விட வேண்டும் என்றார்.

 

அதற்கு பதிலளித்து மேயர் அன்பழகன் பேசுகையில்,…

 

ஏற்கனவே கொடுத்த டெண்டரை ரத்து செய்துவிட்டு, ரீ டெண்டர் விடுவதால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு யார் பொறுப்பு? என கேள்வி எழுப்பினார்.

 

அதைத்தொடர்ந்து திமுக கவுன்சிலர் முத்து செல்வத்திற்கும், மேயர் அன்பழகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து முத்து செல்வம் ரீடெண்டர் கோரிக்கையை வலியுறுத்தி மாநகராட்சி அரங்கில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .

அப்போது முத்து செல்வத்துக்கு ஆதரவாக

Bismi

திமுக கவுன்சிலர் ராமதாஸ் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும் போது, ஏன்

ரீ டெண்டர் விடக்கூடாது என கேள்வி எழுப்பினார்.

 

*அப்போது குறுக்கிட்ட மாநகராட்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் பேசுகையில்,..*

 

சந்தை மதிப்பை ஆய்வு செய்து மீண்டும் ரீ டெண்டர் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

*பிறகு திமுக கவுன்சிலர் ராமதாஸ் பேசுகையில்,…*

 

குடிநீர் இணைப்புகள் சரியாக வழங்கப்படாததால் பொதுமக்கள் தாங்களாகவே குடிநீர் இணைப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்றார்.

 

*அதற்கு பதில் அளித்த மேயர் அன்பழகன்,* இதற்குப் பின்னணியில் நீங்கள் இல்லை என்றால், நாங்கள் காவல் நிலையத்தில் புகார்

அளித்திருப்போம் என்றார்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த ராமதாஸ் வேண்டுமென்றால் என் மீது புகார் கொடுங்கள் என மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் உங்கள் இருக்கையில் அமர்வதற்கு உங்களுக்கு தகுதி இல்லை எனக் கூறினார். இதனால் கோபமடைந்த மேயர் இவரை வெளியேற்றுங்கள்.

இரண்டு மாதத்துக்கு இவர் கூட்டத்தில் பங்கேற்க தடை விதித்து சஸ்பெண்ட்

செய்து, கூட்டத்தில் கலந்து கொள்ள தடை விதிப்பதாக கூறினார். அதைத் தொடர்ந்து மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராமதாஸ் பின்னர் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

*மாநகராட்சி கூட்டத்திற்கு பின் மேயர் அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது..*

 

கவுன்சிலர் ஒருவர் என்னை பார்த்து மேயருக்கே தகுதி இல்லாதவர் எனக் கூறியது வருத்தமாக உள்ளது. குடிநீர் இணைப்பு விவகாரத்தில் தவறு நடந்திருந்தால்

பிளம்பர் மீதும் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினோம். திமுக மாமன்ற உறுப்பினர் சப்ஜெக்ட் மீது கேள்வி கேட்கலாம். ஆனால் என் மீது தனிப்பட்ட வெறுப்பு இருப்பதால் அவர்கள் கேள்வி கேட்கிறார்கள்.

டெண்டர் முறைகேடு என்பது தவறான தகவல். ரூ.24 லட்சத்தை விட தற்போது 28 லட்சத்திற்கு கொடுத்துள்ளோம்.

 

மேயரை பிடிக்கவில்லை என்றால் அதிகாரி மற்றும் இன்ஜினியரிடம் கேட்க வேண்டும். மாமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை என்பது புதிதல்ல. இதற்கு முன்பு இருந்தவர்கள் மேயராக இருந்தவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். அதைத்தான் நானும் செய்துள்ளேன் என்றார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்