தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்-முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.
தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்-முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: ரஜினிகாந்த் வயதை வென்ற வசீகரம்.
முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில்,’மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்.
“ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.”
மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர்- இபிஎஸ்![]()
நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து செய்தி தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாக கோலோச்சி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல தங்களின் Style Magic ரசிகர்களை மகிழ்விக்கட்டும் பல்லாண்டு!
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.



Comments are closed.