சாரண சாரணியர் இயக்க தேசிய பெருந்திரளணிக்கு மணப்பாறையில் இடம் தேர்வு!

தமிழ்நாடு பாரத சாரண, சாரணியா் இயக்க வைர விழா மற்றும் தேசிய பெருந்திரளணிக்கு மணப்பாறை சிப்காட் வளாகத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தமிழ்நாடு பாரத சாரண, சாரணியா் இயக்க வைர விழா மற்றும் தேசிய பெருந்திரளணி திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இந்த பேரணியானது கருணாநிதி நூற்றாண்டு பெருந்திரளணியாக நடைபெறவுள்ளது. இதற்காக மணப்பாறை சிப்காட் வளாகத்தில் 500 ஏக்கா் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று நேரில் பாா்வையிட்டு ஆலோசனை நடத்தினாா். அப்போது, மாதிரி வரைபடத்தை பாா்வையிட்டு ஆட்சியா் பிரதீப்குமாா், சாரணா் இயக்க முதன்மை பேராணையா் அறிவொளி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினாா்.

- Advertisement -

பின்னா் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளா்களிடம் பேசுகையில்…

ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3 வரை சாரணா் இயக்க தேசிய பெருந்திரளணி நடைபெறவுள்ளது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சாரணா் இயக்கத்தின் 15 ஆயிரம் போ் (இருபாலா்) பங்கேற்கவுள்ளனா். இதற்கான அனைத்து வசதிகளையும் செய்து தர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு பள்ளிக் கல்வித்துறையின் 8 இயக்குநா்கள் தலைமையில் 33 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்குழுவினா் பிரிந்து அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வார்கள் என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, எம்எல்ஏ-க்கள் அப்துல் சமது, பழனியாண்டி, மணப்பாறை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அமிா்தவள்ளி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்