சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை – மலேசியா அதிரடி முடிவு!

சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை – மலேசியா அதிரடி முடிவு!

 அடுத்த ஆண்டு முதல் சிறு​வர்​கள் சமூக ஊடகங்களை பயன்​படுத்​து​வதற்கு தடை ​வி​திக்க மலேசிய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

இது குறித்து தொலைத்​தொடர்பு அமைச்​சர் பஹ்மி பட்​சில் கூறியுள்​ள​தாவது:

Bismi

வரும் 2026ம் ஆண்டு முதல் 16 வயதுக்​குட்​பட்ட சிறு​வர்​கள் சமூக ஊடகங்​களை பயன்​படுத்​து​வதற்கு தடை​ விதிக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதற்​கான சட்​டத்தை அரசு உருவாக்கி

வரு​கிறது. இதன் மூலம், 16 வயதுக்​குட்​பட்ட குழந்தைகள் பேஸ்​புக், டிக்​டாக், இன்​ஸ்​டா கி​ராம், ஸ்நாப் ​சாட் போன்ற தளங்​களில் சமூக ஊடக கணக்கை உரு​வாக்​கு​வதோ அல்​லது பராமரிப்​பதோ சட்​டவிரோத​மான​தாக அறிவிக்​கப்​படும்.தனுடன், சுரண்​டல், சைபர்​புல்​லிங், பொருத்த மற்ற உள்ளடக்கத்துக்கு ஆளாகுதல் போன்ற ஆன்​லைன் அச்சுறுத்தல்களி​ல் இருந்​தும் குழந்​தைகளை பாது​காக்க அரசு நடவடிக்கை எடுத்து வரு​கிறது.

இந்​தத் தடையை அமல்படுத்துவதற்கு முன்​பாக இதற்​கான கட்​டமைப்பை இறுதி செய்​வதற்​காக தொழில் ​நுட்ப நிறு​வனங்​கள், குழந்​தைகள் நலக்குழுக்​கள் மற்​றும் கல்​வி​யாளர்​களு​டன் அரசு இணைந்து செயல்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். இந்த விதிகளை மீறி, சிறுவர்கள் சமூக ஊடகக் கணக்குகளைப் பராமரிக்க அனுமதிக்கும் பெற்றோர் மீது அபராதம் விதிக்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்