லால்குடி அருகே கீழ பழனி மலையில் மகா கும்பாபிஷேகம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!
லால்குடி அருகே கீழ பழனி மலையில் மகா கும்பாபிஷேகம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!
திருச்சி | ஏப்ரல் 2, 2026
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள குமுளூர் கீழ பழனி மலையில் வீற்றுள்ள அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று மிக விமர்சையாக நடைபெற்றது.


யாகசாலை பூஜைகள்
இந்த விழாவை முன்னிட்டு நேற்று காலை மங்கல இசையுடன் தொடங்கி, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 6:00 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், வாஸ்துசாந்தி மற்றும் முதற்கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி சிலைகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது.


கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை
இன்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை மற்றும் மகா பூர்ணாஹூதி நடைபெற்றது. பின்னர் யாகசாலையிலிருந்து புனித நீர் அடங்கிய கடங்கள் மங்கல இசை முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.
காலை 9:15 மணி முதல் 10:30 மணிக்குள், அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுப்பிரமணிய சுவாமி, இடும்பன், காமாட்சி அம்மன் உடனுறை கடம்பவனேஸ்வரர் ஆகிய சுவாமிகளின் ஆலய கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பக்தர்கள் திரள்
இந்த விழாவில் குமுளூர், தச்சங்குறிச்சி, மகிழம்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
#TrichyNews #Lalgudi #Kumulur #KeezhPalaniMalai #Kumbabishekam #LordMurugan #SpiritualNews #TamilnaduTemples #Munchanallur #TrichyDistrict





Comments are closed.