திருமயத்தில் வாசிப்பை நேசிப்போம் மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி!
திருமயத்தில் வாசிப்பை நேசிப்போம் மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி!

புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் அடைக்கல மாதா ஆலயத்தில் இருந்து இளைய தலைமுறைகளை சமூக ஊடகங்களுக்கு அடிமையாக்காமல் அவர்களுக்கு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக வாசிப்பை நேசிப்போம் என்ற விழிப்புணர்வு பேரணி. திருமயம் அடைக்கலமாதா பங்குத்தந்தை ஜேம்ஸ் ராஜ் அவர்களின் தலைமையில் செந்தமிழ் ஆர்வலர் அகஸ்டின், அவர்கள் வழிகாட்டுதலின்படி பேரணி வாசிப்பை நேசிப்போம் என்ற பதாகையுடன் தீரர் சத்தியமூர்த்தி கிளை நூலகம் சென்றடைந்தது பேரணியில் வருகை தந்த அனைவரையும் நூலகர் மாலதி வரவேற்றார். மேலும் வாசகர் வட்ட துணைத்தலைவர் பிரபாகர் மாணவ மாணவியருக்கு வாசகர் வட்டத்தின் செயல்பாடுகளை தெளிவாக எடுத்து கூறினார்.அதனைத் தொடர்ந்து பங்குத்தந்தை அவர்கள் மாணவ,மாணவிகளுக்கு நல்ல பல கருத்துக்களை எடுத்துக் கூறினார்.
சமூக ஆர்வலர் அகஸ்டின் மாணவ,மாணவியர்களுக்கு செந்தமிழ் மூலம் கருத்துக்களை சிரிப்பொலிவோடு எடுத்துக் கூறினார். இப்பேரணி தீரர் சத்தியமூர்த்தி கிளை நூலகத்திற்கு வாசகர் வட்டத்தின் உறுப்பினர்களாக 50க்கும் மேற்பட்டவர்கள் சேர்க்கப்பட்டனர் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி சுற்று வட்டார படித்த இளைஞர்களுக்கும் மகளிர்களுக்கும் மற்றும் மாணவ,மாணவிகளுக்கும் உறுப்பினர்களாக சேர்வதற்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்துள்ளது. இந்தப் பேரணி நடப்பதற்கு வழிகாட்டியாக இருந்த சமூக ஆர்வலர் அகஸ்டின் அவர்களுக்கும் அவருடைய செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருந்து பேரணியை தலைமை ஏற்று நடத்தி தந்த அடைக்கல மாதா ஆலய பங்கு தந்தை அவர்களுக்கும் மற்றும் அடைக்கலமாதா ஆலய நிர்வாகிகளுக்கும் நூலகர் வாசகர் வட்டத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.





Comments are closed.