புரட்சித்தலைவி ஜெயலலிதா நினைவு தினம் – திருச்சியில் அமமுக சார்பில் மலரஞ்சலி!

மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் அறிவுறுத்தலின் பேரில், திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், மாவட்ட அவை தலைவர் எம்.எஸ்.ராமலிங்கம் தலைமையில், மாநகர் மாவட்ட அலுவலகத்தில் ஜெயலலிதாவின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, பேரூராட்சி, ஊராட்சி , வட்ட, கிளை செயலாளர்கள் & நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்