திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி பள்ளப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது – 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு!

- Advertisement -

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி பள்ளப்பட்டி கிராமத்தில், அளுந்தூர் தானா முளைத்த முத்துமாரியம்மன் கோவில், பள்ளப்பட்டி காளியம்மன் கோவில் திருவிழாக்களை முன்னிட்டு 9-ம் ஆண்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 9 மணி அளவில் தொடங்கியது. ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் சீனிவாசன் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து திருச்சி, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, அரியலூர், சேலம், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டி ஆறு சுற்றுகளாக நடைபெற உள்ளது.

- Advertisement -

ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடு மற்றும் சிறந்த வீரர்களுக்கு, சைக்கிள் அண்டா, குக்கர், கட்டில் பீரோ, மற்றும் தங்கக்காசு வெள்ளி காசுகள் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது,
விழா ஏற்பாடுகளை பள்ளபட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு திருவெரம்பூர் சரகம் ASP அரவிந்த் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் நான்காவது ஜல்லிக்கட்டு போட்டியாகும்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்