- Advertisement -

தமிழக கட்சிகளை பாஜக இயக்குவதாக கூறுவது தவறு – கார்த்தி சிதம்பரம் எம்.பி

- Advertisement -

தமிழக கட்சிகளை பாஜக இயக்குவதாக கூறுவது தவறு – கார்த்தி சிதம்பரம் எம்.பி கருத்து

பாஜகவுக்கு யாரைத் தலைவராக நியமித்தாலும் அக்கட்சியை தமிழக மக்கள் நிராகரிப்பர்.

Bismi

சிவகங்கை பேருந்து நிலையத்தை மேம்படுத்த திரு. ப. சிதம்பரம் MP மற்றும் திரு. கார்த்தி ப சிதம்பரம் MP தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2 கோடி‌ ரூபாய் செலவில் நடைபெற்ற பணிகள் நிறைவடைந்து இன்று “ராணி ஸ்ரீ ரெங்கநாச்சியார்” பெயரில் புதிய பேருந்து நிலையத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாண்புமிகு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. KR. பெரியகருப்பன் அவர்கள், காரைக்குடி MLA திரு. S. மாங்குடி அவர்கள், மாவட்ட ஆட்சியர் அவர்கள் அரசு அலுவலர்கள், இயக்க, கழக நண்பர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்த தருணம்.

Vagai

கார்த்தி சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:

செங்கோட்டையன் விலகிய இயக்கத்துக்கு பாதிப்பும், அவர் சேர்ந்த இயக்கத்துக்கு பலமும் ஏற்படும். தவெகவை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அக்கட்சியும் கணிசமாக வாக்குகளை பெறும். வரும் தேர்தலில் 3 முனைப் போட்டி என்று கூற முடியாது. சீமானும் களத்தில் உள்ளார். எஸ்ஐஆர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை கடந்த ஜனவரியிலேயே தொடங்கியிருக்கலாம்.சிவகங்கை பேருந்து நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கார்த்தி சிதம்பரம் எம்.பி. உடன் மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி, நகராட்சித் தலைவர் சிஎம்.துரைஆனந்த் உள்ளிட்டோர். 2026 மார்ச் மாதம்தான் தேர்தல் வரும் என்பதால், சிறப்பு தீவிர திருத்தப் பணி காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும். பிஹாரைப் போல தமிழகத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை குறையாது. இறந்து போனவர்கள்தான் நீக்கப்படுவர். தமிழக கட்சிகளை பாஜக இயக்குவதாக கூறுவது தவறான கருத்து. பாஜகவுக்கு யாரைத் தலைவராக நியமித்தாலும் அக்கட்சியை தமிழக மக்கள் நிராகரிப்பர். இவ்வாறு அவர் கூறினார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்