தேர்தல் விதிமீறலா? மண்ணச்சநல்லூர் திமுக முக்கிய நிர்வாகிகளுக்கு 5 சொகுசு கார்கள் பரிசு – முன்னாள் எம்எல்ஏ கதிரவன் அதிரடி!
தமிழ்நாட்டில் இதுவரை தேர்தலில் இல்லாத புது முறையை கையாளும் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ கதிரவன்
தேர்தல் விதிமீறலா? மண்ணச்சநல்லூர் திமுக முக்கிய நிர்வாகிகளுக்கு 5 சொகுசு கார்கள் பரிசு – முன்னாள் எம்எல்ஏ கதிரவன் அதிரடி!


திருச்சி
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக நிர்வாகிகள் 5 பேருக்கு 16 லட்சம் மதிப்புள்ள உயர்ரக கார்கள் வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னணி: 2011 வெற்றி முதல் 2026 களம் வரை
கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கதிரவன். தற்போது வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட அவர் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில், 2011 தேர்தலில் தனது வெற்றிக்காக உழைத்தவர்களுக்கும், வரவிருக்கும் தேர்தலில் வெற்றியை உறுதி செய்யும் வகையில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகவும், தொகுதியின் முக்கிய திமுக நிர்வாகிகள் ஐந்து பேருக்கு கதிரவன் தரப்பில் 16 லட்சம் மதிப்புள்ள உயர்ரக கார்கள் வழங்கப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவு மீறப்பட்டதா?

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்கு அல்லது கட்சி நிர்வாகிகளுக்கு பணமாகவோ, பொருளாகவோ எவ்வித சலுகையும் வழங்கக் கூடாது எனத் தேர்தல் ஆணையம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தச் சூழலில், தேர்தல் விதிகளுக்குப் பயந்து, முன்னாள் எம்எல்ஏ கதிரவன் நேரடியாக வழங்காமல், அவரது தந்தையும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் நிறுவனருமான சீனிவாசன் வழங்குவது போல் இந்த கார்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், 16 லட்சம் மதிப்புள்ள கார் வழங்கும்போது முன்னாள் எம்எல்ஏ கதிரவன் உடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.
எழும் அடுக்கடுக்கான கேள்விகள்:
கட்சி நிர்வாகிகளுக்கு கல்வி நிறுவனத் தாளாளர் ஏன் கார் வழங்க வேண்டும்? அவர்களுக்கும் கல்வி நிறுவனத்திற்கும் என்ன தொடர்பு? என்ற கேள்விகளை எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் எழுப்பி வருகின்றனர்.
அடுத்த கட்ட திட்டம்:
தேர்தல் பணிகளை உற்சாகப்படுத்த, தேர்ந்தெடுக்கப்பட்ட மேலும் சில நிர்வாகிகளுக்கு உயர்ரக இருசக்கர வாகனங்களும் வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.


மக்கள் அதிருப்தி: “நிர்வாகிகளுக்கு வாரி வழங்கும் கதிரவன், தொகுதி மக்களின் அடிப்படை கோரிக்கைகளையும் குறைகளையும் தீர்க்க முன்வருவதில்லை” எனப் பல்வேறு தரப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அரசியல் கணக்கு கைகொடுக்குமா?
வாக்குகளைக் கவரவும் நிர்வாகிகளைத் தக்கவைக்கவும் மேற்கொள்ளப்படும் இந்த ‘அரசியல் விளையாட்டு’, வரும் தேர்தலில் கதிரவனுக்குக் கை கொடுக்குமா அல்லது தேர்தல் ஆணையத்தின் பிடியில் சிக்க வைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மண்ணச்சநல்லூர் தொகுதியில் நிலவும் இந்த கார் விநியோக விவகாரம் திருச்சி மாவட்ட அரசியலில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என மணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி அரசியல் வட்டாரங்களில் முணுமுணுக்கப்படுகிறது

இந்நிலையில்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட
தகவல் தொழில்நுட்ப பிரிவு
சார்பில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்
அவர்களுக்கு கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது அதில்

தமிழக சட்டப்பேரவை தேர்தல்-2026 வருகின்ற ஏப்ரல் மாதம் 23-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் 15.3.2026-ஆம் தேதி மாலையிலிருந்து அமலுக்கு வந்த நிலையில் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் S.கதிரவன்.MLA அவர்கள் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தேர்தல் நடைமுறை விதிமுறைகளை மீறி 16.3.2026 மற்றும் 17.3.2026-ஆம் தேதி அன்று தனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய கழக செயலாளர்களான காட்டுக்குளம் கணேசன், ராமச்சந்திரன், செந்தில்குமார், செந்தில் கார்த்திகேயன், சீனிவாச பெருமாள் மற்றும் பேரூர் கழக செயலாளர்களான ராஜசேகரன் மற்றும் மனோகரன் ஆகியோருக்கு புதியதாக “Mahindra Scorpio N” என்ற நான்கு சக்கர உயரக சொகுசு கார்களை S.கதிரவன்.MLA மற்றும் அவர்களின் தந்தை சீனிவாசன் ஆகிய இருவரும் சேர்ந்து பரிசாக வழங்கியுள்ளனர். மேற்படி அவர்கள் வழங்கியதை மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் S.கதிரவன்.MLA தனது தனிப்பட்ட முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேற்படி இச்செயலாளானது S.கதிரவன்.MLA தேர்தல் நடைமுறை விதிகளை மீறிய செயலாகும்.
எனவே அவர் மீது தேர்தல் நடைமுறை விதிகளை மீறிய குற்றத்திற்குகாக S.கதிரவன்.MLA அவர்களின் மீதும் அவர்கள் தந்தை சீனிவாசன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது





Comments are closed.