தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்காமல் இருப்பதுதான் திராவிட மாடலா?
தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்காமல் இருப்பதுதான் திராவிட மாடலா?

மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்து பணிஓய்வுபெற்ற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய மாதாந்திர ஓய்வூதியத்தை கடந்த 6 மாதங்களாக கொடுக்காமல் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்துள்ளது. தமிழக அரசின் இந்த தொழிலாளர் விரோத செயலை பாரதிய மஸ்தூர் சங்கம் (BMS) வன்மையாக கண்டிக்கிறது.
60 வயதை நிறைவு செய்த சுமார் 4,51,000 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கீழ்காணும் 3 சட்ட விதிகளின்படி ஒவ்வொரு மாதமும் ரூ. 1,200/- ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (கட்டுமானத் தொழிலாளர்கள்) நலத்திட்டம், 1994
தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டம், 2006

தமிழ்நாடு ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டம், 2006
வயது முதிர்ந்த காலத்தில் ஓய்வூதியத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் சட்டபூர்வ சமூக பாதுகாப்பை தமிழக அரசு நசுக்கி வருகிறது.
தமிழகத்தில் தொழிலாளர் நலச் சட்டங்களை முழுமையாக அமல்படுத்தாமல் முதலாளிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் சாதகமாக செயல்படும் தமிழக அரசு 4 ½ லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு சட்டப்பூர்வ ஓய்வூதியத்தை வழங்காமல் தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு தனது தொழிலாளர் விரோத போக்கை கைவிட்டு, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான சட்டபூர்வ சமூக பாதுகாப்பாக விளங்கக்கூடிய ஓய்வூதியத்தை உடனடியாக வழங்கி 4 ½ லட்சம் ஓய்வூதியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென தமிழக அரசை பாரதிய மஸ்தூர் சங்கம் (BMS) வலியுறுத்துகிறது.
இப்படிக்கு என்றும் தேசப்பணியில் ஜி.எக்ஸ் (G. சங்கர்)
மாநில பொது செயலாளர்


Comments are closed.