- Advertisement -

திருச்சி தேசியக் கல்லூரியில் ஐ.ஓ.டி ப்ராஜெக்ட் எக்ஸ்போ – பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்!

- Advertisement -

திருச்சி தேசிய கல்லூரியில் செயல்பட்டு வரும் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில் “ஐ.ஓ.டி ப்ராஜெக்ட் எக்ஸ்போ” தொடக்க விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள சாரநாதன் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு தேசியக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் குமார் தலைமை வகித்தார். துணை முதல்வர் டாக்டர் பிரசன்ன பாலாஜி முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழக, கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைத்தலைவர் டாக்டர் கோபிநாத் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தார். முன்னதாக மாணவர் அப்துல் சமீர் வரவேற்புரை வழங்கினார். இக்கண்காட்சியில் பல்வேறு திட்டங்கள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

Vagai

Bismi

மேலும் இக்கண்காட்சியில் தேசியக் கல்லூரி செயலாளர் ரகுநாதன், முன்னாள் முதல்வர் மற்றும் இயக்குனர் டாக்டர் அன்பரசு, சிறப்பு விருந்தினர் டாக்டர் கோபிநாத், தேசியக் கல்லூரி முதல்வர் டாக்டர் குமார், துணை முதல்வர் டாக்டர் பிரசன்ன பாலாஜி, அறிவியல் குழும தலைவர் டாக்டர் முரளி மற்றும் முன்னாள் அறிவியல் குழும தலைவர் டாக்டர் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு IOT இயந்திரம் சம்பந்தமான வினாக்களை எழுப்பி, IOT இயந்திரத்தினை இயக்கச் செய்து மாணவர்களை பாராட்டி சென்றனர். இந்நிகழ்வில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர்.

தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் துறைத் தலைவர் பார்த்தசாரதி, துணைத்தலைவர் பழனிச்சாமி, பேராசிரியை புவனேஸ்வரி, பேராசிரியை உஷா ஆகியோர் இக்கண்காட்சியை வழி நடத்தினர். நிகழ்ச்சியின் நிறைவாக மாணவர் ஐயப்பன் நன்றியுரை வழங்கினார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்