சிலம்பம் உலக சம்மேளனத்தின் சார்பில் சர்வதேச அளவிலான சிலம்ப போட்டி – வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு!
சிலம்பம் உலக சம்மேளனத்தின் சார்பில் சர்வதேச அளவிலான சிலம்ப போட்டி திருச்சி நேஷனல் கல்லூரி வளாகத்தில் உள்ள உள் விளையாட்டு கூட்ட அரங்கில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் கராத்தே சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த சிலம்ப போட்டியை, காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இதில் ஒற்றைக் கம்பு வீச்சு, இரட்டைக் கம்பு வீச்சு, வாள்வீச்சு, சிலம்பம் சண்டை, அலங்கார வரிசை மான் கொம்பு, வேல் கம்பு, சுருள்வாள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் கீழ் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சிலம்பம் உலக சம்மேளனத்தின் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களும், வெற்றி கோப்பைகளும் வழங்கப்பட்டது. மேலும் இந்த சிலம்ப போட்டியில் இந்தியா, மலேசியா, துபாய், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, கத்தார் போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலம்ப வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து சிலம்பம் உலக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ….
நமது பாரம்பரிய கலையான சிலம்ப கலையை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கட்டாய பாடமாக்க வேண்டும். மேலும் சிலம்ப மாணவர்கள் தொடர்ந்து பயிற்சி பெறுவதற்கும் அயல் நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தார்.