திருச்சி பெண்கள் சிறை வளாகத்தில் புதிய பெட்ரோல் பங்க் திறப்பு விழா – அமைச்சர்கள் பங்கேற்பு!

சிறைவாசிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சிறையில் தோட்டம் அமைப்பது, தொழிற்கூடங்கள் ஏற்படுத்துவது, பயிற்சிப் பட்டறைகள் நடத்துவது, பல்வேறு வகை பொருள்களைத் தயாரிப்பது, விவசாயம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை சிறைவாசிகள் செய்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் சிறைச்சாலையில் கைதிகளை கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் ஃப்ரீடம் செயல்பாட்டின் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் செய்யப்பட்டு வரும் பெண்கள் சிறைச்சாலை அருகில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய ஃபிரீடம் பெட்ரோல் பங்க் திறப்பு விழா நடைபெற்றது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் பெட்ரோல் பங்கை திறந்து வைத்தனர்.

மேலும் இந்நிகழ்வில் சிறைத்துறை டிஜிபி மகேஸ்வர் தயாள், மதுரை சிறைத்துறை டிஐஜி பழனி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், இந்தியன் ஆயில் தமிழ்நாடு புதுச்சேரி தலைமை செயல் இயக்குனர் அண்ணாதுரை, திருச்சி பெண்கள் சிறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தின் மூலம் பெண் சிறைவாசிகளின் வாழ்வாதாரம் தரம் உயர்த்தப்படும் மேலும் பொதுமக்களிடம் ஒரு பிணைப்பை ஏற்படுத்தும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்