திருச்சி பீமநகரில் பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் திறப்பு விழா – மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்!

திருச்சி பீமநகரை தலைமை இடமாக கொண்டு கடந்த 10 ஆண்டுகளாக மிகக் குறைந்த விலையில் டிவி விற்பனை செய்து வந்த பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சென்னையில் 3 கிளைகள் மட்டுமல்லாமல் மதுரை, கோவை, சேலம், தஞ்சாவூர், தென்காசி, ஆகிய பகுதிகளில் கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது பீமநகர் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் பிரம்மாண்டமான இரண்டு மாடியில் பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையகத்தை அமைத்துள்ளது.

இந்த புதிய ஷோரூமின் திறப்பு விழா திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு திருச்சி மத்திய மாவட்ட தலைவர் ஸ்டீல் சலாவுதீன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய ஷோரூமினை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

- Advertisement -

தற்போது டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர், மியூசிக் சிஸ்டம் உள்ளிட்ட அனைத்து விதமான வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யப்படும் இந்த ஷோரூமின் திறப்பு விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, திமுக தலைமை பொது குழு உறுப்பினர் தென்னலூர் பழனியப்பன், மாநகராட்சி கோட்டத் தலைவர் துர்கா தேவி,கவுன்சிலர்கள் பைஸ் அஹமது, தொழில் அதிபர்கள் சையது, கலீல், பூச்சி ராஜ் முஹம்மது, மன்சூர், பேராசிரியர் ராஜசேகர், சிராஜுதீன், ஜான் ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திறப்பு விழாவையொட்டி நடைபெற்ற முதல் விற்பனையை மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது தொடங்கி வைத்தார். விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பொறியாளர் ஜாகிர் உசேன் உள்ளிட்ட ஷோரூம் கட்டமைக்க உறுதுணையாக இருந்த அனைவரையும் பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் நிஜாமுதீன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்