திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ஜோயாலுகாசில் அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

0

திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ஜோயாலுகாசில் அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

- Advertisement -

வேர்ல்ட் ஃபேவரைட் ஜுவல்லரி ஜோயாலுகாசில் அன்னையர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜோயாலுகாஸின் சிறந்த எட்டு வாடிக்கையாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக வரவேற்கப்பட்டனர். மேலும் இந்நிகழ்வின் துவக்கமாக குத்துவிளக்கு ஏற்றி நிகழ்வு துவங்கியது. இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களான பஞ்சவர்ணம், நந்தினி, சுபா, மஞ்சு, விஜி, கோப்பெருந்தேவி போன்றோர் குத்துவிளக்கு ஏற்றி சிறப்பித்தனர். அன்னையர் தினம் என்பதால் சிறப்பு விருந்தினர்கள் தாய்மையின் முக்கியத்துவம் மற்றும் கடமைகள் குறித்து சிறப்புரையாற்றினர். பின்பு ஜோயாலுக்காஸ் மேலாளர் நிஷித்லால் தலைமையில் சிறப்பு விருந்தினர்களால் கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
ஜோய் ஆலுக்காஸில் இன்று முதல் ஜூன் 11ஆம் தேதி வரை தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு செய்கூலி மற்றும் சேதாரத்தில் 50 % தள்ளுபடி என்ற புதிய சலுகை அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு சிறப்பு விருந்தினர்களுக்கு ஜோயாலுகாஸின் மேலாளர் நிஷித்லால் அவர்களும் துணை மேலாளர் நிக்கில்லால் அவர்களும் நினைவு பரிசினை வழங்கி சிறப்பித்தனர். இந்நிகழ்வினை செல்வி தே .சுபஸ்ரீ தொகுத்து வழங்கினார்.
அஷ்விதா அட்வர்டைசிங் உரிமையாளர் திரு இரா. ஹரிஹரன் அவர்கள் இந்நிகழ்வினை சிறப்புற ஒருங்கமைத்தார்.

 

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்