குட்கா விற்பனை செய்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை!

0

திருச்சியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக 795 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது – இனி பாரபட்சம் இன்றி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் – திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி பேட்டி

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு திருச்சி காந்தி மார்க்கெட், கோட்டை மற்றும் பாலக்கரை பகுதியில் உள்ள மூன்று கடை உரிமையாளர்கள் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த கடைகளில் இருந்து இரண்டு மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து
திருச்சி காந்தி மார்க்கெட், கோட்டை பீமநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கும் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் இன்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இணைந்து சீல் வைத்தனர். இந்நிகழ்வில் திருச்சி மாநகர உதவி ஆணையர் அன்பு, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் மூன்று கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து
திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி செய்தியாளர்களிடம் கூறுகையில்…

- Advertisement -

உணவு பாதுகாப்பு துறை மற்றும் திருச்சி மாநகர காவல் துறை இணைந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யும் கடைகள் சோதனை செய்யப்படுகிறது. அதன்படி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த மூன்று கடைகளுக்கு இன்று சீல் வைக்கப்பட்டது. அரசு உத்தரவை மீறி செயல்படும் கடைகள் தயவு தாட்சனை இல்லாமல் தண்டிக்கப்படுவர். இனி தொடர்ந்து இந்த சோதனை நடைபெறும். இன்று ஒரு நாளோடு சோதனை முடியாது. திடீர் சோதனைகள் எப்பொழுது வேண்டுமானாலும் நடைபெறும். கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த சோதனைகளில் திருச்சி மாநகரிலும் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே சோதனையில் ஈடுபட்டு வருகிறோம். இந்த வருடத்தில் மட்டும் 795 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்