- Advertisement -

நம்மளோட ஆட்சி அமைஞ்சதும் ஒவ்வொரு கிராமத்துக்கும் நான் நேரடியா வந்து, என்னுடைய சொந்தங்களாகிய உங்க எல்லாரையும் நான் சந்திக்கிறேன் – தலைவர் விஜய்

- Advertisement -

நம்மளோட ஆட்சி அமைஞ்சதும் ஒவ்வொரு கிராமத்துக்கும் நான் நேரடியா வந்து, என்னுடைய சொந்தங்களாகிய உங்க எல்லாரையும் நான் சந்திக்கிறேன் – தலைவர் விஜய்

எங்க ஓட்டு; எங்க உரிமை.

எங்கள யாரும் விலைக்கு வாங்க முடியாது!

Vagai

எங்க ஓட்டு விசில் சின்னத்துக்குத்தான்… யாரையும் நம்பி ஏமாறமாட்டோம்…

எங்க வார்த்தையில் இருந்து மாறமாட்டோம்… இது நிஜம்.

Thank You!

ஒரு குட்டிக்கதைல இருந்து ஆரம்பிப்போமா?

ஒரு பெரிய ஊரு… ஒரு நாலு ரோடு ஜாய்ண்டாகுற மாதிரி ஒரு ஜங்ஷன்… ஒரு பிஸியான ஏரியா… ஆள் நடமாட்டம் அதிகமா இருக்கக்கூடிய ஒரு ஏரியா… அங்க சென்டர்ல ஒரு முரட்டு ஜல்லிக்கட்டு காளை ஒன்னு நின்னுகிட்டு இருக்கு. கால்ல மண்ணு வீசிகிட்டு, சீறிகிட்டு அப்டியே நின்னுகிட்டு இருக்குது. யாருமே, பக்கத்துல போக முடியல, அந்த இடம் ஒரு கேஷூவலா அப்டியே மாறனும்னா, அந்தக் காளைய அடக்கி அமைதியாக்குன்னாதான் மறுபடியும் ஒரு பேக் டூ நார்மல் சிச்சுவேஷனுக்கு அந்த இடம் மாறும். அந்த ஊர்ல இருக்கிற ஒரு சில பேருக்கு மட்டும்தான் அந்தக் காளை அடங்கும். அவங்க யாருமே அங்க இல்ல… ஆனா, அந்த crowd-ல இருந்த ஒரு சில பேர் already அந்தக் காளைய அடக்குனவங்களோட இருந்த ஒரு சில பேர், எங்களுக்கு இல்லாத அனுபவமா? நாங்க பாக்காத காளையா? நாங்க பாக்காத மாடா? நாங்க போய் அடக்குறோம்னு உள்ள போறாங்க…ஒருத்தராலயும் அந்தக் காளைய தொடக்கூட முடியல… எல்லாரையும் அடிச்சு வீசி தூக்கிப்போட்ருச்சு. இப்ப என்னடா பண்றதுன்னு அப்டின்னு பாக்கும்போது, அந்தக் கூட்டத்த விலக்கிட்டு ஒரு சின்னப்பையன் ஒரு என்ட்ரி ஒன்னு கொடுக்குறான்… உங்களுக்குத்தான் தெரியும்ல… டேய் எங்களாலயே முடியல… நீயெல்லாம் என்னத்தபோய் கிழிக்கப்போற… எங்களுக்கு அவ்வளவு அனுபவம் இருக்குது… நாங்களே அடிபட்டு ஓரமா படுத்துக்கிடக்கிறோம்.. இவன் விளையாட்டுத்தனமா எதோ பண்ணிக்கிட்டு கிடக்குறான்… பாவம் அந்தக் காளைகிட்டபோய் அடிபட்டு சாகப்போறான்… பச்சா பையன்… அந்தப் பையன்… இந்தப் பையன்னு… அண்டர்எஸ்டிமேட் பண்றது… ஏளனமா பேசுறது… இப்படி ஒருபக்கம்…

இன்னொரு பக்கம்… பரிதாபப்பட்டு… அய்யோ பாவமே… இப்டி தனியாபோய் மாட்டிக்கிட்டானே அந்தக் காளைகிட்ட… என்ன பண்ணப்போறானோ… அப்டினுட்டு ஒருபக்கம் பரிதாபப்பட்டு பேசுறாங்க… அந்தச் சின்னப்பையன் எதுவுமே காதுலயே போட்டுக்காம, ரெண்டு பாக்கெட்லயும் கையவிட்டுகிட்டு, ஸ்டைலா.. கெத்தா… தில்லா… அப்டியே உள்ள போறான். ஒரு ஸ்டெப் எடுத்து வைக்குறான்.. அந்தக் காளை அப்டியே சீறிகிட்டே நின்னுகிட்டே இருக்கு… இன்னொரு ஸ்டெப் எடுத்து வைக்குறான், காளை அப்டியே சீறிகிட்டே முன்னாடி வருது. மக்கள் எல்லாரும் பதட்டத்தோட அப்டியே பார்த்துட்டு இருக்காங்க…. இன்னொரு ஸ்டெப் எடுத்து வைக்குறான். காளை அப்டியே முட்ட வரும்போது, பாக்கெட்குள்ள மறைச்சு வெச்சுக்கிட்டு இருந்த ரெண்டு புல்லுகட்டு, அத அந்தக் காளைகிட்ட காட்டுறான்… காளை அப்டியே Sudden-ஆ வந்து நின்னு அது மூடெல்லாம் மாறி, அந்தப் புல்லுக்கட்ட சாப்ட ஆரம்பிச்சுருச்சு… அந்த சின்னபையனும் அந்தக் காளைய அப்டிய தடவிகிட்டே வர்ரான்…அந்தக் காளையும் பக்கத்துல ஒரு குழந்தை மாதிரி நடந்து வந்துகிட்டு இருக்கு… பக்கத்துல இருந்த ஒரு வயல்வெளில காளைய மேயவிட்டுட்டு வர்ரான்… மக்கள் எல்லாரும் அந்தச் சின்னப்பையன ஆச்சரியமா பாக்குறாங்க. அந்த அடிபட்டுக் கிடந்த அனுபவசாலிங்க, தலைய தொங்கப்போட்டு நின்னுகிட்டு இருக்காங்க. ஏன்னா பேசுன பேச்சு அப்படி; வாய் இருக்குன்றதுக்காக நக்கலுமா நையாண்டியுமா நச நச நசன்னு ஒரே பேச்சு… என்ன பண்றது தலைய குனிஞ்சு அப்டியே நின்னுகிட்டு இருக்காங்க…

அங்க ஒரு பெரியவர் வர்றார்… வந்து அந்தப் பையன்கிட்ட கேக்குறார்.. எப்டிப்பா இப்டி ஒரு முரட்டுக் காளை சீறிட்டு நின்னுட்டு இருந்தது.. எப்டி அந்தக் காளைய அடக்குன அப்டினு அந்தப் பையன்கிட்ட கேட்டதுக்கு… அந்தப் பையன் சொல்றான்… “அய்யா, எனக்கு அந்தக் காளையப் பாத்தா கோபமா இருந்தமாதிரி எல்லாம் தெரியல. அந்தக் காளை பசியோட இருந்த மாதிரி இருந்தது. அதுனாலதான் அந்தப் புல்லுக்கட்ட காமிச்ச உடனே, நமக்குத் தேவையானது கிடைச்சுருச்சு அப்டின்ன ஒடனே, இந்தப் புல்லுக்கட்ட சாப்டுட்டு அப்டியே நம்மளோட ஜாலியா வாக்கிங் வந்துருச்சு” அப்டினு சொன்னான். இதக்கேட்ட அந்தப் பெரியவர் சொன்னாராம், “இந்த சின்னவங்க, பெரியவங்க, அனுபவம் இருக்கிறவங்க, அனுபவம் இல்லாதவங்க இதெல்லாம் விஷயமே கிடையாது. யாரா இருந்தாலும் அந்தச் சூழலுக்கு ஏத்த மாதிரி அந்த சிச்சுவேஷனுக்குத் தகுந்த மாதிரி, என்ன பண்ணி அந்தப் பிராப்ளமா சால்வ் பாண்றான். எது பண்ணி அந்தப் பிராப்ளமா சால்வ் பண்றான். அதுதான் விஷயமே; அதுதான் மேட்டரே! சோ நீ சூப்பர்ப்பா… என்ன பிராப்ளம் வந்தாலும் நீ சால்வ் பண்ணிருவ… ” அப்டினு முதுகில தட்டிக் கொடுத்துட்டு அந்தப் பெரியவர் போறாரு…

இப்போ அந்தக் கதைல அந்த முரட்டு ஜல்லிக்கட்டு காளைதான் நம்ம தமிழ்நாட்டு அரசியல் களம்!

அந்தப் பெரியவர்தான் நம்ம தமிழக மக்கள்!

அந்த்ப் பாக்கெட்குள்ள கையவிட்டு தில்லா ஸ்டைலா கெத்தா ஒருத்தன் உள்ள வந்தான் பாருங்க… அவன்தான்…

நான் இல்லங்க… நானு நீங்க… நாம எல்லாரும் சேர்ந்து மாபெரும் மக்கள் சக்தியா இருக்கக்கூடிய நம்ம டி.வி.கே. அதுதான் அந்தச் சின்னப்பையன்.

((விஜய் விஜய் விஜய் என்று மக்கள் ஆராவாரம்… தேங்க்யூ.. தேங்க்யூ… என்று தலைவர் நெகிழ்ச்சி))

மக்களை நேசிக்கிற ஒரு நல்ல தலைமை இல்லாததுனால, இத்தன வருஷமா, வேற வழியில்லாம, ஸ்டாலின் சார் கொடுத்த அந்தப் பொய்யான வாக்குறுதிகள் எல்லாத்தையும் நம்பி ஏமாந்த நம்ம மக்களுக்கு சரியான நேரத்தில் ஒரு வெகுஜன மக்கள் இயக்கமா வந்ததுதான் நம்ம டி.வி.கெ…

அந்த முரட்டு ஜல்லிக்கட்டு காளை கதை ஏன் சொன்னோம்… எதுக்கு சொன்னோம்… யார் யாருக்கெல்லாம் சொன்னோம்னு… புரியவேண்டியவங்களுக்கு எல்லாம் புரியும்னு நினைக்கிறேன். இப்போ நாம ஒவ்வொரு வீட்டுல உயிரா, உணர்வா இருக்கிறோம். ஆனா, நான் வந்து உங்க எல்லாரையும் நேர்ல சந்திக்கனும், நீங்க இருக்கிற ஊருக்கே வந்து உங்க எல்லாரையும் சந்திக்கனும் அப்டிங்கிறதுதான் எனக்கு மனசுல இருக்க ஒரு பெரிய ஆசை!

ஆனா, அந்த சிச்சுவேஷன், ஒரு எதிர்கட்சியா இருந்து கேள்வி கேட்டுகிட்டு இருக்கிற இந்த நேரத்துல, நமக்கு எதிரா என்ன சூழ்ச்சிகள்லாம் நடக்குதுங்கிறது உங்க எல்லாருக்கும் நல்லா தெரியும்… இப்போ உங்களுக்கு ஒரு வாக்குறுதிய கொடுக்கிறோன்… நம்மளோட ஆட்சி அமைஞ்சதும் ஒவ்வொரு கிராமத்துக்கும் நான் நேரடியா வந்து, என்னுடைய சொந்தங்களாகிய உங்க எல்லாரையும் நான் சந்திக்கிறேன்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி நம்ம ஸ்டாலின் சார் ஒரு உருட்டு ஒன்னு உருட்டுனாரு… நீங்க எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீங்க. See இப்போ வரப்போற எலெக்ஷன் எதுக்கான எலெக்ஷன். நம்ம சட்டமன்றம், தமிழ்நாடு சட்டசபைக்கான ஒரு தேர்தல். இதே வந்து தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான எலெக்ஷன் அப்டினு சொல்றாங்க… இன்னும் கொஞ்சம் மேலே போய், தமிழ்நாட்டுக்கும் என்.டி.ஏ-வுக்குமான ஒரு எலெக்ஷன் அப்டினு சொல்றாங்க…

என்ன சார் டெல்லியில போய் நிக்கப்போறீங்களா… அப்புறம் ஏன், தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான ஒரு எலெக்ஷன்னு சொல்றீங்க… இது என்ன பார்லிமெண்ட் எலெக்ஷனா? பிரதமர் பதவிக்கு எதாவது போட்டி போட்றீங்களா? அப்புறம் ஏன் இத தமிழ்நாட்டுக்கும் என்.டி.ஏ-வுக்குமான ஒரு எலெக்ஷன்னு சொல்றீங்க… என்ன லாஜிக்ன்னே எங்களுக்குப் புரியலயே… எந்த எலெக்ஷன எப்டி டீல் பண்ணனும்… எப்டி ஹெண்டில் பண்ணனும்றது நம்ம தமிழ்நாட்டு மக்களுக்குத் தெளிவா தெரியும். நம்ம தமிழ்நாட்டு மக்கள் மாதிரி ஒரு தெளிவான மக்கள நீங்க பாக்கவே முடியாது. சூப்பர் கிளாரிட்டியோட சூப்பர் மக்கள் சார்… நம்ம மக்கள்…

இந்தப் போருக்குப் போறதுக்கு முன்னாடிதான் படை பரிவாரங்களோட போவாங்கனு கேள்விப்பட்டிருக்கேன்… ஆனா, நீங்க என்னடான்னா ஒன்னுத்துக்கும் உதவாத இந்த பால்டப்பாவ உருட்டிக்கிட்டு இருக்கீங்களே சார்… உண்மையிலேயே இந்த எலெக்ஷன் எதுக்கான எலெக்ஷன்னு சொல்லட்டுமா?

தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கிற போர்..

தமிழ்நாட்டு மக்களுக்கும் லஞ்சத்துக்கும் நடக்கிற போர்…

தமிழ்நாட்டு மக்களுக்கும் நிர்வாகத்த சரியா செய்யாத இந்த தி.மு.க அரசுக்கும் நடக்கிற போர்…

தமிழ்நாட்டு மக்களுக்கும் உங்க ஆட்சிக்கும் நடக்கிற போர்…

தமிழ்நாட்டு மக்களுக்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கிற போர்…

இன்னும் சுருக்கமா சொல்லனும்னா, விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கிற போர்…

இதுக்கு நடுவுல இந்த என்.டி.ஏ., இந்த டெல்லி இதெல்லாம் என்ன லாஜிக்னே தெரியமாட்டேங்குது சார்… தமிழ்நாடுதான் விஜய்… இந்த விஜய் தான் தமிழ்நாடு… தூய சக்தி டி.வி.கே-வுக்கும், தீய சக்தி டி.எம்.கே-வுக்கும்தான் இந்தப் போர்… இப்டி உக்கிரமா இருக்கிற இந்த போர்ல, மறுபடியும் ஒன்னுக்கும் உதவாத இந்த பால் டப்பாவ உருட்டிகிட்டு, இன்னொரு காமெடி வேற… அவரோட ஆட்சிலதான் தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலமா இருக்குதாம்…

தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலம்தான், காமராஜர் ஆட்சியில… அண்ணா அவர்கள் டைம்ல… எம்.ஜி.ஆர் அவர்களோட ஆட்சியில… இன்னைக்கு ஒன்னுக்கும் உதவாத இந்த உல்டா மாடல் ஆட்சியில தமிழ்நாடு “சூப்பர் ஸ்டார்” மாநிலமால்லாம் ஒன்னும் இல்ல… “சூப்பர் ஸ்டாண்ட் – அப்” காமெடிகாரர் நடத்துற மாநிலமா மாறிடுச்சு.

மக்களே… உங்களுக்காக மட்டுமேதான் வர்ர தடைகள், சதிகள், சூழ்ச்சிகள் எல்லாத்தையும் தாண்டி இந்த 2026-தேர்தல்ல டி.வி.கே தில்லா நிக்கும். இதுவரைக்கும் நடந்த எலெக்ஷன் வேற; இப்போ நடக்கப்போற எலெக்ஷன் வேற… ஒவ்வொரு 5 இயர்ஸ்க்கும் நடக்குற எலெக்ஷன் மாதிரி இத நினைச்சுடாதிங்க! 50 வருஷத்துக்கு ஒருவாட்டி நடக்கப்போற ஒரு எலெக்ஷன் மாதிரி இது. அதிசய எலெக்ஷன்!

ஒரு எலெக்ஷன்ல அவங்க அவங்களோட எதிரிகளதான் எதிர்ப்பாங்க. அதுதான் எதார்த்தமும் கூட. ஆனா, இந்த எலெக்ஷன்லதான் ஒட்டுமொத்தமா எல்லாரும் சேர்ந்து ஒருத்தன எதிர்க்கிறாங்க. ஒட்டுமொத்தமா எல்லாரும் சேர்ந்து இந்த விஜய எதிர்க்குறாங்க.

ஏன்னா இந்த விஜய் ஊழல எதிர்க்கிறான்… லஞ்சத்த எதிர்க்கிறான்… மக்களோட மக்களா நிக்கிறான். அந்த மக்கள் அவன்கூட நிக்கிறாங்க. அந்தக் காண்டு. எப்டி…. அந்தக் காண்டுதான்… ஒட்டுமொத்தமா எல்லாரும் சேர்ந்து ஒருத்தன எதிர்க்கக் காரணம்.

நீங்க எப்டி வேணும்னா எதுத்துக்கோங்க. ஆனா, போட்டி ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுலதான்.

ஒன்னு டி.வி.கே

இன்னொன்னு டி.எம்.கே…

இந்த எலெக்ஷன் டே-ல.. மேக்ஸிமம் என்ன பண்ணுவீங்க.. போவீங்க… ஓட்டுப்போடுவீங்க… வருவீங்க… அவ்வளவுதான உங்க பார்ட்டிசிபேஷன்…

ஆனா, இந்த எலெக்ஷன்ல நீங்க பங்கெடுத்துக்கப்போறீங்க… உங்க வீட்டுல இருக்கிற ஒரு விஜய்தான், உங்க வீட்டுல இருக்கிற ஒரு விஜிதான், வேட்பாளரா நிக்கப்போறாங்க… உங்க வீட்டுல இருக்கிற ஒரு வேட்பாளர்னா, அப்போ உங்க வீட்டுல இருக்கிற மத்தவங்க எல்லாருமே வாக்காளர்கள்தானே… உங்க அம்மா.. உங்க அப்பா… உங்க அண்ணன், உங்க தம்பி, உங்க சொந்தம் டி.வி.கே வேட்பாளர் அப்டினா… அப்போ உங்க ஓட்டு விசில் சின்னத்துக்குத்தான் தான்னு எல்லாருக்குமே தெரியும். ஏன், நம்பளோட எதிரிகளுக்குக்கூட அது நல்லாவே தெரியும். அதுனாலதான் நமக்கு எதிரா அவ்வளவு அவதூறு பரப்புறாங்க… என்னென்ன அவதூறு பரப்புறாங்கன்னு உங்களுக்கே நல்லா தெரியும்… ஆனா, அவங்களுக்கு தெரியாது, என் மேல அவதூறு பரப்புனா, அது மக்கள் மேல அவதூறு பரப்புற மாதிரின்னு, எனக்கு அரசியல் தெரியலன்னு சொன்னா, அது மக்களுக்கு அரசியல் தெரியலன்னு சொல்றமாதிரின்னு, என்ன அசிங்க அசிங்கமா பேசுனா, அது மக்கள அசிங்க அசிங்கமா பேசுற மாதிரின்னு, எனக்கு எதிரா செய்யுற ஒவ்வொரு செயலும், மக்களுக்கு எதிரா செய்யுற செயல்ன்னு அவங்களுக்கு தெரியாம போச்சு…

இந்த விஜயும், மக்களும் வேறு வேறு இல்லை…

இந்த விஜயும் மக்களும் ரத்தமும் சதையும் மாதிரி,

உடலும் உயிரும் மாதிரி… ஒன்னுல இருந்து ஒன்ன பிரிக்கவே முடியாது…

எஸ்… சென்சிட்டிவ்வான சென்டிமெண்ட் அது.

Bismi

சென்சிட்டிவ்வான சென்டிமெண்ட்.

மக்கள நேசிக்கிற விஜய் வேணுமா…

மக்கள் விரோத ஆட்சி நடத்துற ஸ்டாலின் சார் வேணுமா…

இந்த விஜயை நம்புறீங்களா.. ஸ்டாலின் சாரை நம்புறீங்களா..

இந்த தீய சக்தி, ஊழல் சக்தி இதெல்லாம் ஏன் சொல்றோம்… எதுக்கு சொல்றோம், யாரை சொல்றோம் அப்டிங்கிறதுலாம் மக்களுக்கு நல்லா தெரியும்… அதேமாதிரி TVK-க்கு போட்டி DMK என்பதும் மக்களுக்கு நல்லா தெரியும். அப்படியிருக்கும்போது, நாம எதாவது பேசுனா.. வான்டடா சில பேர் வண்டில வந்து ஏரி நின்னுகிட்டு குரல் கொடுக்குறாங்க… சீரியஸா ஒரு போட்டி நடக்கும்போது, இங்க காமெடிக்குலாம் இடம் இல்லை பாஸ்.

இந்த நேரத்துல ஒரு சீரியஸ் கேள்விய நம்ம அரசியல்வாதிங்ககிட்ட கேக்க நினைக்கிறேன்… நீங்க அரசியலுக்கு வரதுக்கு முன்னால உங்க சொத்து எவ்வளவு… நீங்க அரசியலுக்கு வந்ததுக்கு அப்புறம் உங்க சொத்து என்ன? இதை வெளிப்படையா சொல்ல முடியுமா?

அப்படி வந்த காசெல்லாம் எந்தெந்த தொழில், வேலை செய்து வந்தது? உண்மையிலேயே நீங்க உழைச்ச காசா? இல்லை ஆட்சியதிகாரத்திற்கு வந்தபிறகு ஆட்டையைப் போட்ட காசா? இதெல்லாம் நம்ம கேட்டா, எல்லா ஊழல்வாதிகளும் சேர்ந்து சேத்த வாரி இறைப்பாங்க..

எனக்கு ஒரு புது பிரெண்ட் கிடைச்சுருக்கார்… யாரு தெரியுமா? நம்ம முதல்வர்தான்.. பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டதற்கு, எனக்கு எதிரிகள் யாரும் இல்லை, எல்லோரும் நண்பர்கள்தான் என்று சொன்ன முதல்வர் – கரூர் விஷயத்தில் ஏன் என் மீது பழியைத்திக் தூக்கி போட்டீர்கள்.

உங்களுக்கு மனச்சாட்சின்னு ஒன்னு இருந்தா அப்டி பேசிருப்பீங்களா.. அப்படி நாங்கள் உங்கள் நண்பர்கள் என்றால் ஒரு நிகழ்ச்சி நடத்த ஒரு இடமோ… பெர்மிஷனோ ஏன் கொடுக்கமாட்றிங்க?

உங்களோட உண்மையான நண்பர்கள் யார்னு நான் சொல்லட்டுமா? லஞ்சம், ஊழல், அரசியல் ஆதாயம் இதெல்லாம்தான் உங்க நண்பர்கள். தனிப்பட்ட விதத்தில் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்துகொள்வது பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஆனால், உங்கள் ஆட்சிதான் தப்பான, தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத ஆட்சி!

கொஞ்ச நாளைக்கு முன்னாடி முதல்வர் கூட விசில் சின்னத்திற்குத்தான் வாக்களிப்பார் என்று கற்பனையா ஒன்னு சொன்னேன். ஆனா, இன்னைக்கு நிஜமாவே நமக்கு ஆதரவா ஒரு கோஷத்தை எழுப்பியிருக்காங்க. அது, “எங்க வாக்குச் சாவடி வெற்றி வாக்குச் சாவடி”யாம்! அதற்கு அர்த்தம், எங்க வாக்குச் சாவடி விஜய் வாக்குச்சாவடி! மக்களோட இந்த ஆதரவை பார்த்துட்டு அவரை அறியாமலேயே பேசிட்டாரான்னு தெரில. 50 வருஷம் அரசியல் அனுபவம் இருக்குறவரு உண்மையை ஒத்துக்கிட்டுதானே ஆகணும்.

ஜனநாயகம் என்பது பெரும்பான்மை ஆட்சி அதிகாரம் மட்டுமில்ல. சிறுபான்மை மக்களின் உரிமைகள், உணர்வுகளை உணர்ந்து புனிதம் என்று நினைத்து அதையெல்லாம் காப்பதே என்று 1963-ல் அறிஞர் அண்ணா நாடாளுமன்றத்தில் பேசியது நாம இங்க சொல்றது பொருத்தமா இருக்கும்.

அறிஞர் அண்ணா சொன்னதுதான் டி.வி.கே-வோட 100 சதவிகிதம் நிலைப்பாடு. இதற்காக யாருக்காகவும் சமரசம் கிடையாது. மதச்சார்பற்ற சமூகநீதி தன்மைதான் நம்ம அடிப்படை கொள்கை. அதில் எந்த மாற்றமும் கிடையாது. இதெல்லாம் மறந்துவிட்டு இங்க ஓட்டு வாங்கலாம்னு சிலர் இருக்காங்க. அவங்களை மாதிரி அப்படி சில பிரச்சனைகளில் எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊத்துற பழக்கமே இல்ல. இங்க சில அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் ஒருசில நேரம் அமைதியா இருந்தாலே போதும். ஒரு பிரச்சனையும் வராது.

இப்போது Current பிரச்சனைக்கு வருவோம். மாசமாசம் கரண்ட் பில் கட்டுற மாதிரி கொண்டு வர்றீங்கன்னு சொன்னீங்களே செஞ்சீங்களா… நிறைய வீடுகளில் மாதம் 100 யூனிட் மின்சாரம் மட்டும்தான் பயன்படுத்துவாங்க. அதன் அடிப்படையில் மாசம் எடுத்தால் அவங்களுக்கு Free-ஆ இருக்கும். ஆனா, இரண்டு மாசத்துக்கு அப்புறம் பில் கொடுத்தீங்கன்னா, அது 200 யூனிட்டுக்கு மேல போய் மிகப்பெரிய சுமைதானே..

இது மாடர்ன் கரெப்ஷன்னு எடுத்துக்கலாமா? அப்புறம் பஸ் வசதி… இதைப்பற்றி கேள்வி கேட்டா நாங்க பஸ் விடாத ஏரியாவே இல்லனு வந்துருவாங்க. நம்ம முதல்வர்… அவரிடமே ஒரு தங்கை எங்க ஊருல ஒரு மினிபஸ் கூட இல்லனு சொன்னாங்களே..நிறைய கிராமங்கள்ல பஸ் வசதியே இல்ல…

நிறைய மலை கிராமங்கள்ல பஸ் வசதி இல்ல… ஹாஸ்பிட்டல் வசதியும் இல்லாததால வீட்டிலேயே பிரசவம் பாக்குற ஆபத்து இருக்குன்னு எத்தனை நியூஸ் பார்க்கிறோம். இதெல்லாம் எந்த கணக்குல சேர்த்துகிறது.

அடுத்து பெண்களுக்கு பாதுகாப்பு தமிழ்நாட்டுல NO. 1 ஆ இருக்குதுன்னு சொல்றாங்க. அவங்க சொல்ற We safe model இல்ல, We are not safe model ன்னு சொல்றாங்க.. இப்படியிருக்கும்போது தமிழ்நாட்டுல பெண்களுக்கு பாதுகாப்பு கொட்டிக் கிடக்குதாம்… இதெல்லாம் என்ன சார், கேட்குறவன்லாம் கேசரி சாப்பிடறான்னு நினைசீங்கல்லா…

அடுத்து சட்டம் – ஓழுங்கு… அதெல்லாம் காணாமா போய் ரொம்ப நாளாச்சு… இந்த விஜய் வேற எங்கபோனாலும் சட்டம் ஒழுங்கை பற்றி பேசுறான்னு முதல்வர் கூட இருக்கவங்ககிட்ட சங்கடப்பட்டாராம்.. நாமதான் தமிழ்நாட்டோட whistle-blower ஆச்சே. நாம எப்படி அமைதியா இருக்க முடியும். நாமளும் கேள்வியா கேட்குறோம். ஆனா, பதில் வந்தமாதிரி தெர்ல.. இருந்தாதானே வர்ரதுக்கு….

அஞ்சு வருசமா பதிலே சொல்லாம கடந்து வந்துட்டார். ஆனா, இனிமே அப்படி இருக்க முடியாது. மக்களிடம் பதில் சொல்லியே ஆகணும்.

இந்த தீய சக்திய… இந்த அட்ராசிட்டிய ஒரு எண்ட் கார்டு போடனும்னா… அவங்கள ஸ்விட்ச் ஆப் பண்றதுதான் ஒரே தீர்வு.

அதுக்கான ஒரு ரிமோட்தான் எலெக்ஷன்… அந்த ரிமோட்ல அழுத்த வேண்டியது ஒரே ஒரு ஆப்ஷன். விசில் சின்னத்தோட பட்டன்… விசில் சின்னத்துக்கு நேரா இருக்க அந்த பட்டன. பஜக்கு பஜக்குன்னு ஒரு அழுத்து அழுத்துங்க… அவ்வளவுதான்…

நாம காஞ்சிபுரத்துல பேசும்போது நம்ம விஷன் என்னென்னு சொன்னேன். அதோட தொடர்ச்சியா, இப்போ சில சொல்றேன்

பெண்கள், பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் பாதுகாப்பு NO 1 ஆ இருக்கும்.

சட்டம் ஒழுங்கு ரொம்ப ஸ்டிரிக்டா இருக்கும்.

அரசுப் பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் முதல் தரமா இருக்கும்.

போட்டித் தேர்வுகளுக்கு லட்சங்களா கொட்டி கோச்சிங் சென்டருக்குப் போய் படிக்கிற அவசியம் இல்லாமல், அரசு பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களே போட்டித் தேர்வுகளை சந்திக்கிற மாதிரி ஈஸியா இருக்கும்…

உயர்நிலை பள்ளி பாடத்தில் அடிப்படை அரசியல் சாசன சட்டம் சேர்க்கப்படும்.

ஒன்றிய, மாநில அரசின் செயல்பாடுகள், வங்கிகளின் செயல்பாடுகள் பற்றி மாணவர்கள் எளிதாக அணுக தேர்வுகளற்ற செயல்முறை பாடத்திட்டம் சேர்க்கப்படும்.

இந்தியா முழுக்க உள்ள ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களின் அட்மிஷன் குறித்து மாணவர்களுக்கு புரிதலும், தெளிவும் உண்டாக பயிற்சி உருவாக்கப்படும்.

அனைத்து பள்ளிகளும் பெண் குழந்தைகளுக்கு சுத்தம் மற்றும் சுகாதாரமான, கதவுகள் பொருத்தப்பட்ட ரெஸ்ட் ரூம் அமைப்பது உறுதி செய்யப்படும்.

போதைப் பொருள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும்.

மாவட்ட கலெக்டர்கள், மற்றும் எஸ்.பி-க்களில் சரிபாதி பெண்கள் இருக்கும்படி செய்யப்படும்.

மலை கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பிரசவம் பார்க்கும் வசதியுடன் அமைத்து தரப்படும்.

பஸ் போக்குவரத்து இல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.

ஏற்கெனவே அமைப்புசாரா தொழிலாளர்கள் அமைப்பு இருந்தாலும், ஆட்டோ, டாக்சி, லாரி ட்ரைவர்களின் நலன் மற்றும் குடும்ப நலனிற்காக நல வாரியம் அமைக்கப்படும்.

தென் தமிழகத்தில் தனிக் கவனம் செலுத்தப்படும்.

விவசாயிகள், நெசவாளர்கள், திட்டங்களை அறிந்து காலத்தின் தேவை அறிந்து உருவாக்கப்படும்.

இப்போ நம்ம ஸ்டாலின் சார்,, அறிவாலாயம் பக்கம் யார் நடந்துபோனாலும், யாரு நிழலுக்கு ஒதுங்குனாலும் அவங்கள கூட்டணியில சேர்த்துக்கிறார்…

கொள்ளையடித்திருக்கிற பணத்துல பங்கு ஒன்னு கொடுத்துடறார். அதற்கு, கல்லா பெட்டிக் கூட்டணின்னு பேரு வெச்சுருக்கேன்… இதை கஷ்டப்பட்டு சேர்த்திருக்கிறார். இந்த அரத பழைய கூட்டணி கணக்கோ, கொள்ளையடித்த பணத்தை வைத்து மக்களை ஏமாற்றி ஜெயிக்கவோ முடியாது.

இது மாபெரும் மக்கள் சக்தியான மக்களின் வித்தியாசமான விசில் புரட்சி எலெக்ஷன். உங்களோட நான் இருக்கேன்… நம்மளோட நம்ம மக்கள் இருக்காங்க… இதுக்கு மேல என்ன வேணும்…

confident ஆ இருங்க, நல்லதே நடக்கும்!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்