ஹாக்கி திருச்சி சங்கத்தின் செயலாளர், இணை செயலாளர் தேர்தல் திருச்சியில் நடைபெற்றது!
ஹாக்கி திருச்சி சங்கத்தின் செயலாளர் மற்றும் இணை செயலாளர் பதவிக்கான தேர்தல் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் சங்கத்தில் இருக்கக்கூடிய 30 உறுப்பினர்கள் வாக்களித்தனர். மேலும் இந்த தேர்தலில் செயலாளர் பதவிக்கு 2 பேர் போட்டியிட்டனர்.
அதில் 17 வாக்குகள் பெற்று புதிய செயலாளராக கார்த்திக் வெற்றி பெற்று பதவி ஏற்று கொண்டார். இணை செயலாளர் பதவிக்கு போட்டியின்றி முத்துகுமார் தேர்வு செய்யபட்டார். தேர்தல் அதிகாரி ஜான் சவரிராஜ் தலைமையில் தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தில் இருந்து இராமானுஜம் மேற்பார்வையாளராக கலந்து கொண்டார். தேர்தலில் வெற்றி பெற்ற இருவரும் உடனடியாக பதவி ஏற்று கொண்டனர்.