தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு!

மெழுகுவர்த்தி ஏந்தி, புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது!

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு!

மெழுகுவர்த்தி ஏந்தி, புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது!

Bismi

திருநெல்வேலி,நவம்பர் 30:

தமிழீழ விடுதலைப் போராட்ட களத்தில் “வீர மரணம்” அடைந்த ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளாக, “முதல் களப் போராளி” சங்கர் மறைந்த நவம்பர் 27 தொடங்கி, ஒரு வார காலத்துக்கு “மாவீரர் நாள்” கடைபிடிக்க தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் 1989- ஆண்டில் கட்டளை பிறப்பித்தார். அது முதல் “மாவீரர் நாள்” உலகம் முழுவதும் வாழுகின்ற தமிழர்களால், கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில், இந்த நாளில் திருநெல்வேலி மாவட்டம் “தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்” சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி, பாளையங்கோட்டை மகாராஜா நகரில், கண்மணிமாவீரன் வேளாளர் தலைமையில்,நேற்று முன்தினம் ( நவம்பர்.30) காலையில், நடைபெற்றது. கண்மணி மாவீர் வேளாளர் தலைமையில், “மெழுகுவர்த்தி” ஏந்தி, மலர்தூவி, “வீரவணக்கம்” செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைமை நிலைய செயலாளர் சேகர், புரட்சி பாரதம் கட்சியின், நெல்லை மாவட்ட செயலாளர் “களக்காடு” ஏ.கே.நெல்சன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் மாவட்ட செயலாளர் மணி பாண்டியன். தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் நிர்வாகிகள் மணிமாறன், சின்னத்துரை தங்கராஜ் பாண்டியன், குமார் பாண்டியன். சுடர், சுரேஷ் பாண்டியன், ராஜன், பாலாஜி பாண்டியன், தமிழர் சட்ட இயக்கம் தலைவர் முனைவர்.பார்த்திபன், மாநில பொறுப்பாளர் நிதீஷ் ,நாம் தமிழர் கட்சி மதுர சேகர், “நல்லாசிரியர்” வை.ராமசாமி, பாலச் சந்திரன், “அரியகுளம்” சண்முக சுந்தரமணி மற்றும் மகளிர் அணி ஷர்மிளா, கண்மணி லலிதா ஆகியோர், கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்