- Advertisement -

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இரவு 7 மணிக்கு மேல் பரவலாக கனமழை பெய்ய துவங்கியுள்ளது. 

- Advertisement -

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இரவு 7 மணிக்கு மேல் பரவலாக கனமழை பெய்ய துவங்கியுள்ளது.

 

Bismi

தமிழகத்தில் 10 மாவட்டத்திற்கு மேல் இன்று இரவு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில்

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இரவு 7 மணிக்கு மேல் பரவலாக கனமழை பெய்ய துவங்கியுள்ளது. திருச்சி மாநகர் பகுதியில் சத்திரம் பேருந்து நிலையம், தில்லைநகர், மத்திய பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம், பாலக்கரை, திருவானைக்காவல், உறையூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதே போல புறநகர் பகுதிகளில் நம்பர் ஒன் டோல்கேட், சமயபுரம், மண்ணச்சநல்லூர், லால்குடி,புள்ளம்பாடி, சிறுகனூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெப்பமான சூழல் விலகி குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஏராளமான வாகன ஓட்டிகள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பெய்த கன மழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்