ஶ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை – அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
ஶ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை – அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக அருகாமையில் உள்ள கொள்ளிடக்கரையில்
யாத்திரி நிவாஸ் கட்டப்பட்டுள்ளது. இது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. அறநிலையத்துறை அதிகாரிகள் இதனை பராமரித்து வருகின்றனர்.
தற்போது வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் ஶ்ரீரங்கத்துக்கு வருகை தருகின்றனர். அந்த வகையில் கடந்த 10-ந் தேதி தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன்

(வயது 67) இவரது மனைவி செண்பகவள்ளி (65) ஆகியோர் தங்களது மூத்த மகள் பவானி (42), கண்பார்வையற்ற மகள் ஜீவா ஆகிய இரண்டு மகள்களுடன் யாத்திரி நிவாஸில் 710 வது அறையை எடுத்து குடும்பத்துடன் தங்கி இருந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 4 நாட்களாக அறை கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த யாத்திரி நிவாஸ் ஊழியர்கள் இன்று அங்கு சென்று பார்த்த போது துர்நாற்றம் வீசியுள்ளது.உடனடியாக இது பற்றி ஶ்ரீரங்கம் போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக உதவி போலீஸ் கமிஷனர் சீதாராமன்,
சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நான்கு பேரும் உடல் அழகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளனர்.மூத்த மகளுக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது.
இளைய மகளுக்கு கண்பார்வை தெரியவில்லை. குடும்ப வறுமை காரணமாக ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்தது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.யாத்திரி நிவாஸ் அறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Comments are closed.