குத்தகைக்காரர்கள் விவசாயம் செய்து வந்த நிலம் விவசாயிகள் சொத்து இல்லை, வக்ஃப் சொந்தமான நிலம் என்று அதிகாரிகள் பொய் சொல்லி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பெற்றுள்ளனர் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது
குத்தகைக்காரர்கள் விவசாயம் செய்து வந்த நிலம் விவசாயிகள் சொத்து இல்லை, வக்ஃப் சொந்தமான நிலம் என்று அதிகாரிகள் பொய் சொல்லி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பெற்றுள்ளனர் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாப்பாக் குறிச்சி பகுதியில் 31.60 ஏக்கர் விவசாய நிலம் வஃப்பு சொந்தமான இடம் என உச்சநீதிமன்றத்தின் உத்தரவு இட்ட இடத்தை, அளக்க வந்தவர்களிடம் அதை அனுபவித்து வரும் குத்தகைதாரர்கள் (விவசாயிகள்) மற்றும் நில உரிமையாளர்களின் வாரிசு என கூறப்படுபவர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை திருவெறும்பூர் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாப்பாக் குறிச்சி பகுதியில் 31.60 ஏக்கர் விவசாய நிலத்தை பரம்பரையாக 22 குடும்பத்தை சேர்ந்தவர்கள் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து அதற்குண்டான தொகையும் செலுத்தி ரசீது பெற்று வந்துள்ளனர் மற்றும் பரம்பரையாக இந்த இடத்திற்கு உரிமையாளர்கள் நாங்கள் தான், உரிமையாளர்களின் வாரிசு என கூறப்படுபவர்களும் 31.60 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் அந்த இடம்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுக்கா வரிசை ராவுத்தர் சத்திரம் மற்றும் தண்ணீர் பந்தல் வஃப்பு சார்பில் உரிமை கோரும் இடமான பாப்பாக்குறிச்சி கிராம சர்வே எண்
198 ல் உள்ள 31.60ஏக்கர் இடம் வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானது
என சென்னை உச்ச நீதிமன்றம் அந்த இடத்தை சம்பந்தப்பட்டவர்களுடன் அளந்து ஒப்படைக்குமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அந்த இடத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் விவசாயிகளும்,
நில உரிமையாளர்களின் வாரிசு என கூறுபவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று வருவாய் துறையினர் மூலம் வக்புவரிய நிர்வாகிகள் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இன்று அந்த இடத்தை அளந்து எடுப்பதற்கு திருச்சி ஆர்டிஓ அருள் திருவெறும்பூர் தாசில்தார் செயபிரகாசம் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்தபோது நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் விவசாயிகள், சொக்கலிங்கம் என்பவர் தலைமையிலும்
நிலத்திற்கு உரிமையாளர் வாரிசு என கூறும் முகமது இலியாஸ் மற்றும் அவரது உறவினர்களும்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஏ எஸ் பி பனாவத் அரவிந்த் மற்றும் ஏ டி எஸ் பி மதியழகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் விவசாயிகள் கால அவகாசம் வேண்டும் என அறிவுறுத்திய நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி நாங்கள் நடவடிக்கை எடுப்போம் கால அவகாசம் கொடுக்க முடியாது என்று கூறியதால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் விவசாயிகள் விவசாயம் செய்யும் இடத்திற்கு உள்ளே அனுமதிக்காமல் உள்ளே செல்லும் சாலை பகுதியை மறைத்து சாலையில் உருண்டு பெரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கைது செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் (குத்தகைதாரர்) சேர்ந்த 17 பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்து காட்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
பின்னர்
திருவெறும்பூர் வட்ட சார்பாக நில அளவையர் சுமித்ரா தலைமையில் இடத்தை அளக்கும் பணியை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் வக்ஃப் வாரியத்தை சேர்ந்தவர்கள் அந்த இடம் தங்களது வக்கு வாரியத்திற்கு சொந்தமான இடம் இந்த இடத்தில் யாரும் அனுமதி இன்றி நுழையவோ, ஆக்கிரமிக்கவோ கூடாது மீறினால் காவல்துறை மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அதிரடியாக விளம்பர பதாகைகளை நட்டு உள்ளத்துடன், அந்த பகுதியில் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் சுத்தம் செய்து கம்பி வேலி அமைத்து அடைத்து உள்ளனர்.
இதனால் காலை 9 மணியில் இருந்து மதியம் 1.30 மணிவரை அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நிலம் குத்தகைதாரர்கள் (விவசாயிகள்) தரப்பை சேர்ந்த சொக்கலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது
நாங்கள் நான்கு தலைமுறைகளாக விவசாயம் செய்து கொண்டு வருகிறோம், ஆரம்பத்தில் 1982ல் இருந்து இந்த வயல் வந்து வரிசை ராவுத்தர் வாரிசு இல்லாத காரணத்தினால் கவர்மெண்ட் லேண்ட் சீலிங் ஆக்ட் மூலமாக கவர்ன்மெண்ட் எங்களுக்கு ஒப்படைத்து விட்டது . நாங்கள் இதுவரை குத்தகை ரசீது கட்டி வருகிறோம், நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம், குத்தகை பதிவேடு எங்களுடைய பெயர்கள் இருந்து வருகிறது . இதற்கிடையில் நாங்கள் குத்தகைதாரர்கள் என்று எங்கள் உரிமை நிலை நாட்டுவோம் என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம்
நாங்கள் போராடிக் கொண்டிருக்கும் சமயத்தில் இவர்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று இடத்தை ஆக்கிரமிப்பு செய்கிறவர்கள் என்று அதிகாரிகள் அனைவரும் பொய்யான சான்றிதழ் வழங்கி உள்ளனர்.
அறிவிப்பு கொடுக்காமல் எங்களை அக்கிரமிப்பாளர்கள் என்று சொல்வது தவறு, நாங்கள் மீண்டும் நீதிமன்றத்தின் நாடி வந்துள்ளோம், அவர்கள் வாங்கிய நீதிமன்ற உத்தரவில் காளிமுத்து அவர்களுடைய இடத்திற்கு மட்டும் திர்வு பெற்றுக் வந்துள்ளனர்.
நாங்கள் விவசாயம் செய்து கொண்டிருக்கிறோம் இப்போது வந்து நீங்கள் இடத்தை அளப்பது தவறு எங்களிடம் வந்து பிரச்சனை செய்து வருகிறார்கள்.
இவற்றில் காளிமுத்து அவருடைய இடம் ஒரு ஏக்கர் 21 சென்ட் இடத்தை மட்டுமே அளக்க முடியும் மற்ற இடங்களை அளக்க முடியாது
அப்படி இல்லாமல் அளக்கும் பட்சத்தில் எங்களுடைய இடத்தை தாண்டி அவர்கள் முள்வேலி அமைப்பதால் நாங்கள் மற்ற இடங்களுக்கு செல்ல முடியாது அதனால் எல்லா இடத்தை அளந்து முள்வேலி அமைக்க கூடாது
எங்களுடைய இடத்தை அளக்க கூடாது. நாங்கள் இந்த இடத்தில் விவசாயம் செய்து வருவதால் விவசாயத்தை காக்க வேண்டும் விவசாயத்தை அழிக்க நீங்கள் வந்தீர்கள், விவசாயத்தை அளிக்கும் அரசு அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்
நாங்கள் விவசாயி இல்லை என்று சொல்லி எந்த அதிகாரிகள் சொன்னாலும் அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்
நாங்கள் வருடம் குத்தகையை காண பணத்தை கட்டி வருகிறோம் எங்கள் விவசாயத்தை அழிக்க நினைக்கிறார்கள் என்றார்.
நிலம் உரிமை கோரும் நபர்கள் சார்பாக முகமது இலியாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது
நாங்கள் முப்பது வருடமாக வசித்து வருகிறோம் எங்களுடைய சொந்த இடம் இது இந்த இடத்திற்கு முன்னால் இருந்தவர்கள் வாரிசு யாரும் இல்லை அதற்கு டிஆர்ஓ சான்றிதழ் வழங்கி உள்ளார்.
நாங்கள் உண்மையான வாரிசு எங்களிடம் அனைத்து சான்றிதழ்களும் உள்ளது நாங்கள் உயிருடன் இருக்கும் பொழுது எப்படி எங்களுடைய இடத்தை பட்டா மாறுதல் செய்ய முடியும். பட்டாவில் எங்களுடைய பெயர்கள் அனைத்தும் உள்ளது அதை மீறும் பட்சத்தில் நாங்கள் கடுமையான போராட்டத்தை மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்.
Comments are closed.