ஒவ்வொரு தம்பதியினரும் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் – சந்திரபாபு நாயுடு!
பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டின் கருவுறுதல் விகிதம் மிக முக்கியம் !
ஒவ்வொரு தம்பதியினரும் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் – சந்திரபாபு நாயுடு!
பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டின் கருவுறுதல் விகிதம் மிக முக்கியம் !

ஒவ்வொரு தம்பதியினரும் 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டின் கருவுறுதல் விகிதம் மிக முக்கியம் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
திருப்பதியில் உள்ள தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தில், பாரதிய விஞ்ஞான் சம்மேளனத்திம் நடைபெற்றது. இதில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய சந்திரபாபு நாயுடு, இந்தியாவின் இதிகாசங்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியம் குறித்த அறிவைப் புகட்ட வேண்டும் என ப் பேசியுள்ளார்.
இந்தியாவின் மக்கள் தொகை, அறிவு மற்றும் திறமை நமது பாரம்பரிய மதிப்புகள் மற்றும் தேசிய இலக்குகளுடன் இணைந்தால், உலகளாவிய சக்தியாக இந்தியா உருவெடுப்பதைத் யாராலும் தடுக்க முடியாது. நாம் நமது குழந்தைகளையும் இளைஞர்களையும் மேற்கத்திய சூப்பர் ஹீரோ கதைகளுக்குள் முடக்கிவிடாமல், அவர்களுக்கு இந்தியாவின் இதிகாசங்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியம் குறித்த அறிவைப் புகட்ட வேண்டும்.இந்தியாவின் புராண நாயகர்கள் மிகச் சிறந்த வலிமை, லட்சியங்களைக் கொண்டுள்ளனர்.ராமர், கிருஷ்ணர், சிவபெருமான் ஆகியோரின் பெருமைகள் குறித்தும், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் கிடைக்கும் பாடங்கள் குறித்தும் நாம் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும்.அவதார் போன்ற பிரபலமான திரைப்படங்களை விடவும் ஆழமானவை. பகாசுரன், கம்சன் போன்ற கதாபாத்திரங்களின் கதைகள் மூலம் குழந்தைகளுக்கு நன்மைக்கும் தீமைக்கும் உள்ள வேறபாட்டைக் கற்பிக்க வேண்டும்.வயதானவர்கள் மற்றும் குறைந்து வரும் மக்கள்தொகையில் ஒரு பெரிய பிரச்சனை உள்ளது. இந்த விஷயத்தில், இன்று நீங்கள் பார்த்தால், இந்தியாவில் இருந்து சுமார் 4 முதல் 5 கோடி மக்கள் இந்தியாவிற்கு வெளியே வசிக்கின்றனர். இன்று நீங்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும், அதிக தனிநபர் வருமானம் இந்தியர்களால் ஈட்டப்படுகிறது.எந்தவொரு ஆடம்பரமான பகுதியும், அமெரிக்கர்களின் சராசரி வருமானம் 55,000 டாலர்கள் முதல் 60,000 டாலர்கள் வரை இருக்கும்,அதே நேரத்தில் இந்தியர்கள் சுமார் 135,000 டாலர்கள் சம்பாதிக்கிறார்கள், இது இரண்டு மடங்கு அதிகம். மோகன் பகவத் எப்போதும் கூறுவதுபோல ஒவ்வொரு தம்பதியினரும் 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டின் கருவுறுதல் விகிதம் மிக முக்கியம், உலகளவில் ஆதிக்கம் செலுத்த இந்தியாவுக்கு ஒரு பெரிய தொழிலாளர் சக்தி வேண்டும். நாம் மக்கள் தொகையில் கவனம் செலுத்தினால், 2047க்குப் பிறகும் இந்தியாதான் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும்’ எனப் பேசியுள்ளார்.


Comments are closed.