சமத்துவ கிறிஸ்மஸ் விழா திருச்சி ஜே.கே.சி.அறக்கட்டளை, ஐ.சி.எப். பேராயம் சார்பில் நடைபெற்றது.
சமத்துவ கிறிஸ்மஸ் விழா
திருச்சி ஜே.கே.சி.அறக்கட்டளை, ஐ.சி.எப். பேராயம் சார்பில் நடைபெற்றது
திருச்சி ஜே.கே.சி. அறக்கட்டளை, ஐ.சி.எப். பேராயம் சர்வ சமய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் 34 -வது ஆண்டு சமத்துவ கிறிஸ்மஸ் விழா நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறந்த சேவைக்கான விருதுகள் வழங்கும் விழா திருச்சி தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. ஜே.கே.சி.அறக்கட்டளை நிறுவனத் தலைவர் மற்றும் ஐ.சி.எப்
பேராயத் தலைவர் முனைவர்
டாக்டர் பா.ஜான் ராஜ்குமார் தலைமையில்.
மாநில சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சி.பி. ரமேஷ் வரவேற்புடன்,ஜே.கே.சி.அறக்கட்டளை கௌரவத் தலைவர் பேராசிரியர் பி ரவிசேகர், பேராசிரியர், டாக்டர் சி. அருள், ஜே. கே.சி. நிர்வாக குழு உறுப்பினர் ஆடிட்டர் ரிச்சர்ட், பேராசிரியர் டாக்டர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலையில்.
சிறப்பு விருந்தினர்களாக அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் கே. எஸ். சுப்பையா பாண்டியன், வி.ஜி.பி. குழும உப தலைவர் திருச்சி ஆர். தங்கையா, ஜமால் முகமது கல்லூரி பேராசிரியர் சையத் ஜாஹிர் ஹசன், திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற தாசில்தார் கே.எஸ்.அப்துல் அஜீஸ், திருச்சி பீமநகர் நளினி வீரமணி, பிளானிட்டோரியம் அறக்கட்டளை ஆடிட்டர் வீரமணி, காயிதே மில்லத் ஆட்டோ ஸ்டீல் சங்க தலைவர் டாக்டர் கே.எம்.எஸ். ரபிக் அகமது, மாதா மகிமை பறைசாற்று மைய தலைவர் பேராசிரியர் எம்.ஆர். அசோகன், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் பிரிட்டோ,
எம். அப்துல் கலாம், எம். ராமராஜ், ஆசிரியர் எம்.நடராஜன், மூத்த வழக்கறிஞர் கே. செல்வராஜ், டாக்டர் மதிகுமார், டி. ஐசக், பால் மாணிக்கம், பாஸ்டர்கள் ராஜன், மோகன்,
ஜெயசீலன் ரமேஷ் எபினேசர், ரஜினி நெகேமியா மற்றும் எஸ் ராஜலிங்கம், ஆசிரியர் மாரிமுத்து, முன்னாள் உதவி ஆய்வாளர் ஆரோக்கியசாமி, ஸ்டீல் என்.எம். சலாவுதீன், ஆசிரியர் எம். அலெக்சாண்டர், சகுந்தலா சந்தானகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர், நிகழ்ச்சியின் முடிவில் விக்னேஷ் நன்றி கூறினார்.