திருச்சியில் மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
திருச்சியில் மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி தென்னூர் மின்வாரிய அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணை பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,
மின்சார வாரியத்தில் கள உதவியாளர்கள் நேரடி நியமன அறிவிப்பை கண்டித்தும், எந்தவித பணி வரன்முறையின்றி கேங்மேன் பணியாளர்களை அனைத்து பணியும் ஈடுபடுத்தி ஏமாற்றும் வாரியத்தை கண்டித்தும், ஐந்தாண்டு காலம் மின்சார வாரியத்திற்காக உழைத்த பணியாளர்களை கள உதவியாளராக மாற்றும் வரை tnps தேர்வாணையத்தின் கள உதவியாளர்கள் நேரடி அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மண்டல செயலாளர் ஆனந்தபாபு, மாவட்ட செயலாளர் இசக்கிதுரை, மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.





Comments are closed.