திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் நடைபெற்ற, மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் நடைபெற்ற, மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்!

Bismi

மேற்பார்வை பொறியாளர் நேரடியாக பங்கேற்று, குறைகளை கேட்டறிந்தார்!திருநெல்வேலி,நவ.7:- தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பாக (TNPDCL) திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், வள்ளியூர் மின் கோட்ட “மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம் ” வள்ளியூர்” செயற்பொறியாளர் அலுவலகத்தில், (நவம்பர்.7) காலையில் நடைபெற்றது. திருநெல்வேலி வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேசுவரி, தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட, மின் பயனீட்டாளர்கள் அளித்த மனுக்களுக்கு, உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு, வள்ளியூர் கோட்ட செயற் பொறியாளர், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு, மேற்பார்வை பொறியாளர் உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில், வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். “மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம்” முடிந்தவுடன், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை பொறியாளர் பேசும்போது, “வடகிழக்குப் பருவமழை மற்றும் அதன் சவால்களை எதிர்கொள்ளும் விதமாக தேவையான முன்னெடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பணிகளை விரைந்து முடிப்பதற்கும், வள்ளியூர் கோட்டத்தில் விவசாய மின் இணைப்புகளை, தொடர்ச்சியாக ஆய்வு செய்து, மின்வேலி அமைக்கப்பட்டு இருந்தால், காவல்துறை உதவியுடன் சட்டப்படி, கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கும், மின் பயனீட்டாளர்கள் அளிக்கும் புகார்களை சரி செய்வதற்கு, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இயற்கை இடர்பாடுகளான திடீர் சூறைக்காற்று, இடி, மின்னல், மழை ஆகியவற்றால் மின் தடங்கல் ஏற்பட்டால், உடனடியாக போர்க்கால அடிப்படையில் அவற்றை சரி செய்து, சீரான மின் விநியோகம் வழங்குவதற்கும், வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் பாதைகளை, தொடர்ச்சியாக ஆய்வு செய்து, மரக்கிளைகளால் மின் தடங்கல் ஏற்படும் என தெரிய வந்தால், பாதுகாப்பு கருதி மின் விநியோகத்தை நிறுத்தி, உடனடியாக மரக்கிளைகளை அப்புறப்படுத்து வதற்கும், மின் நுகர்வோர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு, உரிய பதில்களை கனிவுடன் தெரிவிக்கவும், அனைத்து மின் இணைப்புகளையும், தொடர்ச்சியாக ஆய்வு செய்து, வாரிய விதி முறைகளுக்கு முரணாக இருந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், வருவாய் இழப்பீட்டை தடுப்பதற்கும், இணையவழி மூலமாக மின் கட்டணம் செலுத்தும் வசதிகள், மின் பாதுகாப்பு , மின் சிக்கனம் போன்றவை குறித்து, மக்களிடம் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உத்தரவிட்டார்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்