வேலன் மருத்துவமனை சார்பில் மருத்துவர் கலந்தாய்வு மற்றும் மருத்துவர் தின விழா திருச்சியில் நடைபெற்றது!
திருச்சி வேலன் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை சார்பில் மருத்துவர் கலந்தாய்வு மற்றும் மருத்துவர் தின நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. வேலன் மருத்துவமனையின் நிர்வாகிகள் மருத்துவர் ராஜவேல், மருத்துவர் தேம்பாவணி, மருத்துவர் அகிலா மற்றும் மருத்துவர் சித்ரா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மருத்துவர் சித்ரா நவீன முன்னேற்றங்கள் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம் என்ற தலைப்பிலும், மருத்துவர் செந்தில்குமார் பச்சிளம் குழந்தை சிகிச்சை என்ற தலைப்பிலும் உரையாற்றினர். முன்னதாக மருத்துவர் தேம்பாவணி வரவேற்புறை வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் சிறந்த அணுகக்கூடிய மருத்துவர்களுக்கான விருதினை வேலன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ராஜாவேல் வழங்கினார். இந்நிகழ்வில் வேலன் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் திருச்சியைக் சேர்ந்த மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக மருத்துவர் அகிலா நன்றியுரை வழங்கினார்.