திமுக திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு மாநகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

0

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள நடராஜபிள்ளை சரஸ்வதி அம்மாள் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு திமுக திருச்சி கிழக்கு மாநகர செயலாளர், மண்டலக்குழுத் தலைவர் மதிவாணன் தலைமை வகித்தார்.

இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு பேசுகையில், 1977 ஆம் ஆண்டு தமிழக முழுவதும் எம்ஜிஆர் வெற்றி பெற்ற போதும் திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வெற்றி பெற்றது.
கடந்த சட்டமன்ற தேர்தலிலும் 50 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று திமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றி பெற்றார்.

தமிழகத்திலேயே நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு முதன் முறையாக செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் நடத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக மற்றும் அவர்களுடன் இணைந்த கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஒரு கூட்டணி அமைய உள்ளது.
திமுக கூட்டணியில் திமுக, காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட், , 2 முஸ்லிம் லீக் ஆகியவை உள்ளது. இது தவிர புதிதாக எஸ்டிபிஐ கட்சி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. தேர்தல் சமயத்தில் அது தெரிய வரும்.
மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் கூட்டணியில் உள்ளது. அனைத்து கூட்டணி கட்சிகளையும் திமுக தலைவர் ஸ்டாலின் அரவணைத்து செல்கிறார் என்றார்.

- Advertisement -

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்,
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கொள்ளும் வகையில் ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள தமிழகத்திலேயே முதல் முறையாக திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரத்தில் தான் கூட்டம் இன்று நடக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி பூத் கமிட்டி அமைப்பது, சாதனைகளை எடுத்துக் கூறி தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளை ஒற்றுமையுடன் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். இதில் திருச்சி கிழக்கு மாநகரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அதிக வாக்குகளை வெற்றி பெறும் வகையில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். முதல்வரின் இரண்டு ஆண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். முதல்வரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.

இந்த கூட்டத்தில், வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்ஏ,, சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், சௌந்தரபாண்டியன், கதிரவன், பழனியாண்டி மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், சபியுல்லா, கவுன்சிலர் செந்தில், கோவிந்தராஜ் அ.த.த.செங்குட்டுவன், மூக்கன், லீலா வேலு, குணசேகரன், பகுதி செயலாளர்கள் கொட்டப்பட்டு தர்மராஜ், நீலமேகம்ராஜ் முகம்மது, மோகன் மணிவேல், ஏஎம்.ஜி. விஜயகுமார்,பாபு கவுன்சிலர் சிவக்குமார்., பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமேகலை ராஜபாண்டி, ராஜேஸ்வரன், கே. கே. கே. கார்த்திக், கவுன்சிலர்கள் சாதிக் பாஷா, தாஜுதீன், பன்னீர்செல்வம், வட்டச் செயலாளர்கள் எம்.ஆர். சி.சந்திரன், கோவிந்தராஜன், சுரேஷ்,உதயா ரஃபிக், மலைக்கோட்டை பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் குணா, மயில் ராஜபாண்டி வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

மாநகர பொருளாளர் தமிழ்ச்செல்வம் நன்றி கூறினார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்