மூன்று தலைமுறைகளாக வீடு கட்டி வாழ்ந்து வந்த இஸ்லாமிய சமுதாய மக்களின் வீடுகளை ஆக்கிரமிப்பு-இடித்து தள்ளிய திமுக அரசு அதிகாரிகள்.
மூன்று தலைமுறைகளாக வீடு கட்டி வாழ்ந்து வந்த இஸ்லாமிய சமுதாய மக்களின் வீடுகளை ஆக்கிரமிப்பு-இடித்து தள்ளிய திமுக அரசு அதிகாரிகள்.
மணமேல்குடி அம்மா பட்டினத்தில் மூன்று தலைமுறைகளாக வீடு கட்டி வாழ்ந்து வந்த இஸ்லாமிய சமுதாய மக்களின் வீடுகளை ஆக்கிரமிப்பு என கூறி இடித்து தள்ளிய திமுக அரசு அதிகாரிகள். தகவல் அறிந்து ஆறுதல் கூறச் சென்ற புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழக செயலாளர் முன்னாள் வாரியத் தலைவர் பிகே.வைரமுத்துவிடம் கண்ணீர் மல்க ஏதாவது செய்து உதவுங்கள் என கோரிக்கை வைத்த கிராம மக்கள்..
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணமேல்குடி தாலுகாவில் உள்ளது அம்மாபட்டினம் கிராமம்.சுமார் 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சமுதாய மக்கள் வாழ்ந்து வரும் இந்த கிராமத்தின் ஒரு பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் மூன்று தலைமுறைக்கு மேலாக மக்கள் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி வாழ்ந்து வந்த மக்கள் தங்கள் வாழ்ந்து வரும் பகுதியிலேயே தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்து மனுக்கள் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பொதுமக்களின் மனுக்களை மீது முடிவெடுக்காத திமுக அரசு அந்த வீடுகளை அகற்ற நீதிமன்ற உத்தரவு வந்துள்ளது எனக்கூறி கடந்த சில நாட்கள் முன்னதாக வீடுகளை காலி செய்ய கூறி நோட்டீஸ்களை ஒட்டி உள்ளனர். இதனை அறிந்த கிராம மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திமுக அரசின் அதிகாரிகளை கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்தினர்.


பொதுமக்களின் நியாயமான போராட்டத்திற்கும் செவி சாய்க்காத திமுக அரசின் அதிகாரிகள் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து தள்ளியுள்ளனர். இதனால் தங்கள் உடமைகள்,வீடு வாசல்களை இழந்த கிராம மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவர் PK.வைரமுத்து Ex MLA., அவர்கள் அந்தப் பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூற சென்ற நிலையில் தங்களின் இந்த இயலா நிலையை குறித்து விளக்கியதோடு ஏதாவது செய்து தங்களை காத்தருள வேண்டும் என்று கனத்த இதயத்துடன் கோரிக்கை வைத்தனர்.
அம்மாபட்டினம் கிராம மக்களின் கோரிக்கையை கேட்டறிந்தவர் அந்த கிராமத்தின் மூத்த தலைவரான MSR.அகமது தம்பி என்பவரை இப் பிரச்சனையில் என்ன தீர்வு காணலாம் என்ற ஆலோசனையை நடத்தினார்.
பின்னர் சட்ட வல்லுனர்கள் ஆலோசனை நடத்தி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களிடம் இப்பிரச்சனையை தெரிவித்து பாதிக்கப்பட்டுள்ள கிராம மக்களுக்கு நீதியை நிலநாட்ட துணை நிற்போம் என்று வாக்குறுதி அளித்துச் சென்றார்.
இந்நிகழ்வின் பொழுது புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர்,மாநில விவசாய அணி இணை செயலாளர் கு.ராஜமாணிக்கம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட பொறுப்பாளர்கள் M. சுரேஷ்குமார், T.காசிராமன், மாவட்ட துணைச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் M.ராஜநாயகம், மணமேல்குடி ஒன்றிய கழக செயலாளர்கள் துரை.மாணிக்கம், பவித்ரா கண்ணன், அறந்தாங்கி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் PM.பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்





Comments are closed.