பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் பொதுக்குழு கூட்டம் பற்றிய ஆலோசனைக் கூட்டம் திருச்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் பொதுக்குழு கூட்டம் பற்றிய ஆலோசனைக் கூட்டம் திருச்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இயல் இசை நாடக துறையில் உள்ள பன்முகக் கலைஞர்களின் நலவாழ்வு குறித்து தமிழகத்தில் திருச்சியை தலைமை இடமாக கொண்டு பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது, மாநிலம், மாவட்டம் தாலுகா வாரியாக, பாரம்பரிய பன்முகக் கலைகளை வளர்ப்பதற்கும், நலிந்த பன்முக கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், பொதுமக்களிடத்தில் இயல், இசை, நாடகம் மூலம் பல நல்ல கருத்துக்களைக் கொண்டு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கும், பன்முகக் கலைஞர் நலவாழ்வு அமைப்பு ஏற்படுத்தி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான படிவம் வெளியிடப்பட்டது, மேலும் வருகிற ஜூன் மாதத்தில் நடைபெற இருக்கும் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெறும் என்றும், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் குறித்தும், நிகழ்ச்சி நிரல் பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது,
நிகழ்ச்சி குறித்த தகவல் முழுவதும் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தலைமை நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பகுருதீன் அலி அகமது ஒருங்கிணைப்பில்,நிறுவன தலைவர் வேல்முருகன் தலைமையில், பொதுச் செயலாளர் பழனி முருகன் முன்னிலையில் மாநில இணைச் செயலாளர் பாரதி பொன்னுசாமி, மாநில மக்கள் தொடர்பாளர் டூயட் சசிகுமார், மாநில ஆலோசகர் குழு வீரேந்திர குமார், திருச்சி மாவட்ட தலைவர் NT. முருகன், திருச்சி மாவட்ட துணைத் தலைவர் அன்வர், திருச்சி மாவட்ட செயலாளர் ஐயப்பன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.