சுதந்திர தின விழாவில் ₹.24 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்!
திருச்சி மாவட்ட நிா்வாகம் சாா்பில் சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள மாவட்டக் காவல் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாா் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தி, புறாக்களைப் பறக்கவிட்டு, போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னா் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் அவரது வாரிசுகளைக் கௌரவித்தாா். தொடா்ந்து பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 329 அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினாா். பின்னா் பல்வேறு துறைகளின் சாா்பில் 27 பயனாளிகளுக்கு ரூ. 23 லட்சத்து 81 ஆயிரத்து 998 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் காவல் கண்காணிப்பாளர் வருண் குமார், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி மற்றும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed.