திருச்சியில் மகளிர் விடுதிகள் மற்றும் முதியோர் இல்லங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
திருச்சி மாவட்டத்தில் உள்ள மகளிர் விடுதிகள் மற்றும் முதியோர் இல்லங்களில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் திருச்சி மாவட்டம், மாத்தூர் அன்னை சத்யா குழந்தைகள் இல்லத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், தங்கும் அறை, உணவு அருத்தும் அறை, சமையல்அறை, பொருட்கள் இருப்பு வைக்கும் அறை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளி வகுப்பறைக்குச் சென்று மாணவிகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார்.
தொடர்ந்து திருச்சி விநோபா நகரில் உள்ள டாக்டர் கமலம்மா பாலகிருஷ்ணன் முதியோர் இல்லம், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள அலெக்ஸ் பணிபுரியும் மகளிர் விடுதி ஆகிய இடங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து முதியோர்களிடம் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து சங்கிலியாண்டபுரத்தில் தமிழக அரசின் நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் Tmsss-14 வயதுக்கு மேற்பட்ட அறிவுசார் குறைபாடுடையோருக்கான தொழிற்பயிற்சியுடன் கூடிய இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும் சிதைவு தோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பகல் நேர பராமரிப்பு மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வுகளில், உதவி ஆட்சியர் அமித்குப்தா, சமூக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி, இணை இயக்குநர் மருத்துவ நலப்பணிகள் பரமசிவன், குழந்தை பாதுகாப்பு அலுவலர் ராகுல்காந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Comments are closed.