இந்திய விமானப் படை கமாண்டர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ராஜ்நாத் சிங் செல்லவிருந்த நிலையில், அவருக்கு தொற்று உறுதியானது.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெறும் இந்திய விமானப் படை கமாண்டர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ராஜ்நாத் சிங் செல்லவிருந்த நிலையில், அவருக்கு தொற்று உறுதியானது. இதனால் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது ரத்தானது.
அவரை பரிசோதித்த மருத்துவக் குழுவானது அவர் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தியது. அதனையடுத்து தற்போது அமைச்சர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு லேசான அறிகுறிகளே ஏற்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.