மதக்கலவரத்தை உருவாக்குவது தான் பா.ஜ.க.வின் அரசியல் வியூகம் – கனிமொழி எம்.பி
மதக்கலவரத்தை உருவாக்குவது தான் பா.ஜ.க.வின் அரசியல் வியூகம் – கனிமொழி எம்.பி

திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாக மாற்ற பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். முயற்சிப்பதாக கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:
தமிழ்நாட்டில் மதநல்லிணக்க சூழலை சீர் குலைக்க பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து முயற்சி செய்கிறது.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டை உடைக்கும் வகையில் தீர்ப்பளித்துள்ளார்.2014-ல் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவைக் கல்லில் தீபத்தை ஏற்றச் சொல்கிறார்கள்.திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாக மாற்ற வேண்டும் என்று பா.ஜ.க.வினர் கூறி வருகிறார்கள். இப்படி பேசுவது உங்களுக்கும், கட்சிக்கும் நல்லதல்ல என கிரண் ரிஜிஜூ மிரட்டுகிறார். பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பொய் பிரசாரம் செய்கிறார். மதக்கலவரத்தை உருவாக்குவது தான் பா.ஜ.க.வின் அரசியல் வியூகம். திருப்பரங்குன்றத்தில் நூற்றாண்டுகளாக இருக்கும் நடைமுறையை மாற்றக் கேட்பது சரியானது அல்ல .நீதிமன்றத்தை பயன்படுத்தி கலவரத்தை தூண்ட முயற்சிப்பது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.


Comments are closed.