மகாத்மா காந்தி பெயரில் உள்ள 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை மகாத்மா பேரிலேயே நடைமுறைப்படுத்த வலியுறுத்தி காங்கிரசர் திருச்சியில் பேரணி நடைபெற உள்ளது – திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெக்ஸ் பேட்டி
திருச்சி காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸ் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
காங்கிரஸ் 2004ல் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்காக சோனியா காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் ஊரக வேலை வாய்ப்பு திட்டம் செயல்படும் என உறுதியளித்ததின் பேரில் மகாத்மா காந்தி பெயரில் 100 நாள் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை மன்மோகன் ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு பயன் பெறும் இத்தட்டம் செயல்படுத்தப்பட்டது.
2 பாஜக அரசு பல்வேறு பிளவுகளை உருவாக்கும் நோக்கில் மகாத்மா காந்தி 100நாள் வேலை வாய்ப்பு பணியாளர் குறைப்பு ஊதியம் வழங்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டனர்.
ஒரு மாதம் முன்பு மத்திய அரசு சட்டத்தின் பெயரை ராம்.ஜீ என பெயர் மாற்றம் செய்யப்பட்டதுடன் 40%சதவிகித மாநில அரசு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் திட்டத்தை மாற்றி அமைத்துள்ளனர்.

இதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும்.
மகாத்மா காந்தி பெயரில் மீண்டும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி சென்னையில் இன்று பாதையாத்திரை நடைபெறுகிறது.
இதில் தமிழக பொறுப்பாளர் வேணுகோபால், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தொகை ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இதன் தொடர்ச்சியாக வரும் 7ம்தேதி சனிக்கிழமை திருச்சி மெயின்கார்டுகேட்டில் உள்ள மகாத்மாசிலை முன்பு பாதயாத்திரை துவங்கி சிங்காரத்தோப்பு வழியாக காந்தி மார்க்கட் வரை சென்று அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த பாதை யாத்திரையில் திருச்சி, அரியலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், கட்சியினர் திரளாக பங்கு பெறுகின்றனர்.
இந்த கண்டன போராட்டத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் கிரிஷ் கோயங்கி, முன்னாள் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர் என தெரிவித்தார்.
இந்த பேட்டியின் போது தலைவர்கள் வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், தெற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம் ஆகிய உடன் இருந்தனர்.


Comments are closed.