திருச்சி கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டி ; அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் விருப்பம்…

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் அவர்கள் தலைமையில், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்கு சாவடி முகவர்கள் கூட்டம் தியாகி அருணாச்சல மன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, வாக்குச்சாவடி முகவர்களுடன் கலந்தாலோசித்து, வாக்கு சாவடி பணிகள் குறித்த ஆலோசனைகள் வழங்கினார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்பம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கூட்டணி கட்சியோடு பேச்சுவார்த்தை செய்து திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்வில் தெற்கு மாவட்ட தலைவர் கே ஆர் ஆர் ராஜலிங்கம்,வடக்கு மாவட்ட தலைவர் தொட்டியம் சரவணன், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தலைவர் பெனட் அந்தோணிராஜ், கார்த்திக் தங்கபாலு, முன்னாள் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், பொருளாளர் முரளி, சிறுபான்மை பிரிவு முதன்மை செயலாளர் பேட்ரிக் ராஜ்குமார், அமைப்பு சாரா தேசிய செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹீம், துணை தலைவர் ஜெயராமன், மாநில செயலாளர் அசோகன், முன்னாள் ராணுவ அணி மாநில தலைவர் ராஜசேகரன், மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் ஷீலா செலஸ், மாவட்ட நிர்வாகிகள் அன்பு ஆறுமுகம், ஷேக் தாவூத், விமல், உறந்தை செல்வம், சத்தியநாதன், கோட்ட தலைவர்கள் மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, மார்க்கெட் பகதுர்ஷா, வரகனேரி இஸ்மாயில், ஏர்போர்ட் கனகராஜ், ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, அரியமங்கலம் அழகர், ஜங்ஷன் பிரியங்கா படேல், காட்டூர் ராஜா டேனியல் ராய், புத்தூர் மலர் வெங்கடேஷ், பொன்மலை பாலு, அணித்தலைவர்கள் மகிளா காங்கிரஸ் அஞ்சு, மனித உரிமை பிரிவு ஆறுமுகம், மாணவர் காங்கிரஸ் நரேன், இந்திரா தோழி மாரீஸ்வரி, அமைப்பு சாரா பிரிவு மகேந்திரன், கலை பிரிவு அருள், எஸ் சி பிரிவு கலியபெருமாள், மாநில பொதுச் செயலாளர் சோபியா, விவசாய பிரிவு அண்ணாதுரை, இலக்கிய அணி பத்மநாதன், ரீகன், சுப்புராஜ், வார்டு நிர்வாகிகள் பெரியசாமி, ஆசியா, சோபியா, சித்ரா, விஜயலட்சுமி, கருப்பையா, செந்தமிழ்செல்வன், செவ்வந்திலிங்கம், மலர்க்கொடி, ரமேஷ், அன்னக்கிளி, முருகேஷ், ரெங்காதேவி, குமரவேல், சார்லஸ், ரவிசுந்தரம், வசந்தி, குமார், சந்திரா, விமலா, தனலட்சுமி, சார்புனா, காயத்ரி, ராஜகுமாரி, ஆரிஃப், ரஃபிக், சித்ரா, சாந்தி, சரவணன், ஞான வடிவேல், அப்துல்மகித், சாகுல் அமீது, அபுதாகிர், பாண்டியன், பெல்ட் சரவணன், மகேஷ், விஜி, ஜெயராமன், அப்துல்ரஹீம், குமார், சம்பத் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் திரளாக கலந்துகொண்டனர்.





Comments are closed.