திருச்சி மாநகரம், கே கே நகர் குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் கிளமெண்ட் செல்வம் அவர்களின் 26 ஆண்டு கால பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது
பாராட்டு விழாவில் சிறப்பு உதவி ஆய்வாளர் கேகே நகர் குற்றப்பிரிவு திருச்சி மாநகரம் கேகே நகர் சரகம் உதவி ஆணையர் சுரேஷ்குமார்,
கே கே நகர் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், கேகே நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயா, ஏர்போர்ட் ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் கலந்து கொண்டு பாராட்டி நினைவு பரிசு வழங்கி மகிழ்ந்தனர்.
சமூக ஆர்வலர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் அவர்கள் கலந்து கொண்டு ரெ.கிளமெண்ட் செல்வம் அவர்களின் சேவையை பாராட்டி சான்றிதழ் வழங்கி, வாழ்த்துரை வழங்கினார்,டாக்டர். ரபீக் அகமது அவர்கள் கலந்து கொண்டு நினைவு பரிசினை வழங்கினார்.
திருச்சி மாநகர் காவல்துறையில் ரெ.கிளமெண்ட் செல்வம் அவர்கள் 26 ஆண்டுகள் பல்வேறு காவல் நிலையங்கள், ரயில்வே காவல் நிலையம் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல், முதல் அணி எழுத்தர் மற்றும் காவல் பயிற்சி ஆசிரியராகவும், நுண்ணறிவுப் பிரிவு (IS), போக்குவரத்து காவல்துறையில் பணியாற்றியுள்ளார்.
முதலமைச்சர் மெடல்,சான்றிதழ் உட்பட, நூற்றுக்கணக்கான விருது சான்றிதழ்கள் பெற்றுள்ளார். ரெ.கிளமெண்ட் செல்வம் அவர்களின் 26 ஆண்டு கால மக்கள் சேவையை பாராட்டு விழாவில் திருச்சி மாவட்ட சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் காவல்துறை நண்பர்கள், குடும்பத்தார்கள், உறவினர்கள் என பலரும் வாழ்த்தி பாராட்டி மகிழ்ந்தனர்.