- Advertisement -

திருச்சி மாவட்டத்திற்கு வரும் 16 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

0

- Advertisement -

தமிழகத்தில் பொதுவாக வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை தவிர பிரசித்தி பெற்ற கோவில்களில் நடைபெறும் திருவிழா காரணங்களாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேர் திருவிழாவையொட்டி, வரும் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு ஜூன் 8 ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என திருச்சி மாவட்ட ஆட்சியாளர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Bismi

இந்த கோயிலின் சித்திரை பெருந்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதை தொடர்ந்து, ஏப்ரல் 15ஆம் தேதி வெள்ளிக் குதிரை வாகனத்தில் சாமி வலம் வருவார். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்ரல் 16-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய நாள் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Vagai

மேலும் ஏப்ரல் 17ஆம் தேதி வெள்ளி காமதேனு வாகனத்திலும், ஏப்ரல் 18ஆம் தேதி முத்து பல்லாக்கும், ஏப்ரல் 19ஆம் தேதி தெப்ப உச்சமும் நடைபெறும். மேலும் ஏப்ரல் 23ஆம் தேதி தங்க கமல வாகனத்தில் திரு வீதி உலா நடைபெற உள்ளது. இந்த நிகழ்வை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூட்டம் இருப்பதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்