திருச்சி விமான நிலையத்தில் ₹.2.10 லட்சம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்!
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் உரிய அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட 12,400 சிகரெட் பாக்கெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனா். மலேசியத் தலைநகா் கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த பயணியொருவா் ஏராளமான சிகரெட் பாக்கெட்டுகளை உரிய அனுமதியின்றிக் கொண்டு வந்தது தெரியவந்தது. அதில் மொத்தம் 12, 400 சிகரெட்டுகள் இருந்தன. இதையடுத்து ரூ. 2.10 லட்சம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.